India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அறிவியல் பூங்காவில் பரதநாட்டியம், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் என (ஜன.15) மற்றும் (ஜன.16) ஆகிய இரண்டு நாட்கள் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. எனவே பொங்கல் விடுமுறை நாட்களில் நடைபெற உள்ள கலைநிகழ்ச்சியில் அனைத்து பொதுமக்களும் கண்டுகளிக்கலாம், என ஆட்சியர் மு.பிரதாப், இன்று தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட தனித்தேர்வு மையங்களில் ஜூன் 2012 முதல் ஆகஸ்ட் 2022 வரையிலான பருவங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் துணைத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின் அம்மதிப்பெண் சான்றிதழ்கள் அவர்கள் தேர்வெழுதிய அந்தந்த தேர்வு மையங்களில் நேரடியாக விநியோகம் செய்யப்பட்டது என ஆட்சியர் தெரிவித்தார்.

உ.பி., மாநிலத்தைச் சேர்ந்தவர் ராமாசங்கர் இவர் மப்பேடு பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை வழக்கம்போல் பணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ராமாசங்கரை கொடூரமாக தாக்கி அவரிடமிருந்து ரூ. 10,000 மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தாக்குதலுக்கு ஆளான ராமாசங்கர் திருவள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவள்ளூர்: போஸ்ட் ஆபிஸில் உள்ள RD திட்டத்தில் தினமும் ரூ.50 என்ற அடிப்படையில் மாதம் ரூ.1,500 கட்டினால், 5 ஆண்டு முடிவில் 6.7% வட்டியுடன் 1,07,050 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். இதே போல் 100 ரூபாய் என்ற வீதத்தில் சேமித்தால் 2,12,972 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். எதிர்காலத்தில் இந்த தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தில் இணைய அருகில் உள்ள போஸ்ட் ஆபிஸ் அலுவலகத்தை அனுகவும்.

மப்பேடு பகுதியில் இன்று(ஜன.12) அதிகாலை வடமாநில இளைஞர் ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கி, ரூ.10,000, செல்போன் திருடிய சம்பவம் நடந்தேறியுள்ளது. இந்தத் தாக்குதலால் படுகாயமடைந்த வடமாநில இளைஞர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரைத் தாக்கிச் சென்ற 6 பேரை மாவட்ட போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்து வந்தாலும், அதுகுறித்து உடனடியாக 044-27667070 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த 16 வயது +2 மாணவி, நேற்று(ஜன.11) காலை டியூசனுக்கு சென்ற போது, கவரைப்பேட்டை அடுத்த கீழ்முதலம்பேடு கிராமத்தைச் சேர்ந்த விஜயராகவன்(19) என்பவர் பின் தொடர்ந்து, மாணவியின் செல்போனைக் கேட்டு தொல்லைக் கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில், அவரை போக்சோவின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., பொங்கலுக்கு ஊருக்கு கிளம்பியாச்சா..? ஆம்னி பஸ்ஸிலோ, அரசு பேருந்திலோ அதீத பண வசூல், மோசடி, இன்ன பிற உதவிகளுக்கான உதவி தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுபடி, அரசு பேருந்தின் இயக்கம் குறித்த தகவல்களுக்கு 9445014436, ஆம்னி பஸ் புகார்களுக்கு 18004256151, 044-24749002, 044-26280445, 044-26281611 ஆகிய எண்களை அழைக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார்(32). இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பால்நல்லூர் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் தனது பைக்கில் வேலைக்கு சென்ற போது நெமிலி அருகே, அவர் பைக் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.