India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவள்ளூர் பகுதியில், குறைந்த வட்டியில் லோன் வாங்கி தருவதாக கூறி 15 பேரிடம் ரூ.2.12 கோடி வரை மோசடி செய்யப்பட்டதாக, ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு-க்கு (CCB) ஒரு புகார் வந்தது. அந்த புகாரின் அடிப்படையில், தலைமறைவாக இருந்து வந்த சாரா ஜோஸ்பின் பியூலா, கார்த்திகேயன், தினகரன், சித்ரா ஆகிய 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூரைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு கடந்த 2021-ல், அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (56) பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை தட்டிக்கேட்ட சிறுமியின் தாயாரை, முருகனின் மகன் ராஜ்குமார் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த வழக்கு விசாரணை நேற்று முடிந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி முருகனுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனையும், ராஜ்குமாருக்கு 5 ஆண்டுகள் தண்டையும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஜன.08) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை நேர ரோந்து பணிக்கான விவரங்கள் தற்போது காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. காவலர்களின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.மக்களுக்காக இரவு நேர ரோந்து பணியினை ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் காவலர்கள் செயல்படுத்தி வருகின்றனர். தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியஓபுளாபுரம் சேர்ந்த நகிலேஷ் 14,17, 19 வயதுக்குட்பட்ட பாரதியார் தின, குடியரசு தின புதிய விளையாட்டு போட்டிகளில் சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற ஜூனியர் சிலம்பாட்டத்தில் பல சுற்றுகளின் முடிவில் வெற்றி பெற்றுவெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இவரை பாராட்டும் வகையில் கிராமத்தினர் பேனர் வைத்து வெற்றியை கொண்டாடினர்.

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) திருவள்ளூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது<

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

திருவள்ளூர்: பாடியநல்லூரில் நேற்று(ஜன.7) இரவு 11:00 மணி அளவில் எதிர்வரும் ஜனவரி 9 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள “உங்கள் கனவுகளை சொல்லுங்கள்” நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழக முதல்வர் பங்கேற்று தொடங்கி வைக்கவுள்ள இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அமைச்சர் நாசர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் நேரில் பார்வையிட்டனர்.

ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதளம் உள்ளது. அங்கிருந்து ராக்கெட் விண்வெளியில் ஏவப்பட்டு வருகிறது. இந்நிலையில், வருகிற ஜன.12ஆம் தேதி காலை செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. ஆகையால், கடலில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் திருவள்ளூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.