Thiruvallur

News March 30, 2024

திருவள்ளூர்: துண்டுப்பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு

image

திருவள்ளூர் நகராட்சியில் மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து நேற்று (மார்ச் 29) பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரபுசங்கர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் இந்த நிகழ்வில் துறைசார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.

News March 29, 2024

திருவள்ளூர்: நாளை முழு வேலை நாள்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான தொடக்க நிலை உயர்நிலை மேனிலை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நாளை(மார்ச்.30) முழு வேலை நாள் என திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். எனவே நாளை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் முழு வேலை நாளாக செயல்படும்.

News March 29, 2024

ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை

image

தமிழகத்தில் 39 தொகுதிகளில் வருகின்ற ஏப்ரல்.19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அனைவரும் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஏப்ரல்.19ஆம் தேதி அன்று அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

News March 29, 2024

காரில் எடுத்து சென்ற 4 லட்சம் பறிமுதல்

image

பொன்னேரி அடுத்த புதுவாயல் GNT சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கண்ணன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழவேற்காட்டில் இருந்து கும்முடிபூண்டிக்கு சென்ற பெர்னார்டு என்பவரின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் ரூ. 4 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. பின்னர் அதனை கைப்பற்றிய பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

News March 28, 2024

காரில் எடுத்து சென்ற 4 லட்சம் பறிமுதல்

image

பொன்னேரி அடுத்த புதுவாயல் GNT சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கண்ணன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழவேற்காட்டில் இருந்து கும்முடிபூண்டிக்கு சென்ற பெர்னார்டு என்பவரின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் ரூ. 4 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. பின்னர் அதனை கைப்பற்றிய பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

News March 28, 2024

திருவள்ளூர்: வேட்பு மனு நிராகரிப்பு

image

திருவள்ளூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வைத்திருந்த கரும்பு விவசாயி சின்னத்தை பெற்ற பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி வேட்பாளர் கந்தனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் சுயேட்சை என்றும் சில இடங்களில் பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி என்றும் குறிப்பிட்டிருந்ததாக, நாதக வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

News March 28, 2024

திருவள்ளூர்: கொலை… நாயால் சிக்கிய குற்றவாளி!

image

பொன்னேரி அடுத்த கனகவல்லிபுரத்தில் வீட்டில் தனியாக இருந்த சரஸ்வதி (55) என்பவரை மர்ம நபர் கத்தியால் வெட்டி கொலை செய்து கழுத்தில் இருந்த 5 சவரன் நகையை பறித்த நிலையில், பொன்னேரி போலீசார் கொலையாளியை தேடி வந்தனர்.  இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான அசோக் (35) என்பவர் கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை கண்டுபிடித்தது போலீஸ் மோப்ப நாய் டாபி என்பது குறிப்பிடத்தக்கது.

News March 27, 2024

கழுத்தை அறுத்து செயின் பறித்த நபர் கைது

image

பொன்னேரி அடுத்த கனகவல்லிபுரத்தில் வீட்டில் தனியாக இருந்த சரஸ்வதி (55)என்பவரை மர்ம நபர் கத்தியால் வெட்டி கொலை செய்து கழுத்தில் இருந்த 5 சவரன் நகையை பறித்து சென்றார. இதையடுத்து  பொன்னேரி போலீசார் கொலையாளியை தேடி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான அசோக் (35) என்பவர் கொலை செய்திருப்பது தெரியவந்தது. அவரை கைது செய்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 27, 2024

திருவள்ளூர்: தேர்தல் பொது பார்வையாளர் நியமனம்

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கினங்க, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு பொது பார்வையாளராக அபுஇம்ரான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஆட்சியர் அலுவலக சுற்றுலா மாளிகையில் அறை எண் 7-இல் தங்கி உள்ளார். பொதுமக்கள் இவரை 90037 60953 எண்ணிலோ நேரிலோ தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

News March 27, 2024

திருவள்ளூர்: பெண்ணின் கழுத்தை அறுத்து கொள்ளை

image

பொன்னேரி: கனகவல்லிபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் குமார், சரஸ்வதி தம்பதியர். குமார் இன்று காலை வெளியே சென்றிருந்த நிலையில் சரஸ்வதி தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் சரஸ்வதியை கழுத்தை அறுத்து கொலை செய்து அவர்  அணிந்திருந்த செயினை பறித்து சென்றனர். குமார் திரும்பி வந்து பார்த்தபோது சரஸ்வதி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!