India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டையில் இன்று (ஏப்ரல் 3) திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து திரைப்பட நடிகரும், திமுக தலைமை கழக பேச்சாளருமான வாசு விக்ரம் வாக்கு சேகரித்தார். மேலும் இந்த நிகழ்வில் எம்எல்ஏ சந்திரன் உட்பட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கோடைகாலம் துவங்கியுள்ளதால் பொதுமக்கள் சாலையோரம் விற்கப்படும் பழச்சாறுகள் மற்றும் குளிர்பானங்களை அருந்தி வருகின்றனர். இவ்வாறு விற்கப்படும் குளிர்பானங்கள் தரமானதாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என விற்பனையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதுகுறித்த புகார்களுக்கு 94440 42322 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூரில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நேற்று (ஏப்.1) திருத்தணியில் வெப்ப அளவு 100°F ஆக பதிவாகி உள்ளது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதை மெய்ப்பிக்கும்விதமாக வெயில் வாட்டிவதைக்கிறது. எனவே மக்கள் பகலில் வெளியே செல்வதை தவிர்க்குமாறும், குளிர்ச்சியான இயற்கை பானங்களை எடுத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் அருகே மின்கம்பம் உள்ளது நேற்று இரவு அவ்வழியே வந்த லாரி மின்கம்பத்தின் மீது மோதியதில் பலத்த சேதம் அடைந்த மின்கம்பம் உடைந்தது. இதனால் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த ஊத்துக்கோட்டை மின்வாரிய ஊழியர்கள் தற்காலிகமாக சீரமைத்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் மின்விநியோகம் பாதித்தது.
கடம்பத்தூர் மேற்கு ஒன்றியம் மப்பேடு கூட்டுச்சாலையில் திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்காக தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் பணிமனையை நேற்று இரவு திறந்து வைத்தார் எம்எல்ஏ ராஜேந்திரன். உடன் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் உட்பட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
திருவேற்காடு அருகே அயனம்பாக்கத்தை சேர்ந்தவர் நாசர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 28-ந்தேதி இரவு பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் நாசரிடம் கத்தி முனையில் ரூ.1000-ஐ பறித்து சென்றனர். இதுகுறித்து நாசர் அளித்த புகாரின் பேரில் சத்தியமூர்த்தி, சக்தி மற்றும் கிஷோர் குமார் ஆகிய மூவரை திருவேற்காடு போலீசார் நேற்று கைது செய்தனர்.
பூந்தமல்லி அடுத்த கோலப்பஞ்சேரி சோதனை சாவடியில் நேற்றிரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த வேனை மடக்கி சோதனை செய்தபோது சுமார் 2 கோடியே 29 லட்ச ரூபாய் சிக்கியது. விசாரணையில் இந்த பணம் ஏடிஎம் மையத்தில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்டது என கூறப்பட்டது. ஆனால் உரிய ஆவணமில்லாததால் பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள் பூந்தமல்லி கருவூலத்தில் ஒப்படைத்தனர்
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில்-ஐ ஆதரித்து நேற்று இரவு திருவள்ளூர் எம்எல்ஏ ராஜேந்திரன் திருவள்ளூர் நகரம் வள்ளுவர்புரம் பகுதியில் இல்லம் தோறும் சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் விச்சூர் கிராமம், S.P.நகர் பகுதியில் அரசு மானியத்துடன் வழங்கக்கூடிய, லாரி இன்ஜின்களுக்கு பயன்படுத்தும் கருப்பு ஆயிலை பதுக்கி கள்ள சந்தையில் விற்பதாக குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரிகளுக்கு நேற்று(மார்ச் 29) தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தனிப்படை போலீசார் சுமார் 4.38 லட்சம் லிட்டர் ஆயிலை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் நகராட்சியில் மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு 100% வாக்களிப்பதன் அவசியம், 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் செய்ய வேண்டிய ஜனநாயக குறித்து நேற்று (மார்ச் 29) பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரபுசங்கர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் இந்த நிகழ்வில் துறைசார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.