Thiruvallur

News March 17, 2024

பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

image

2024 ஆம் ஆண்டு தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், பிற சிறப்பு முகாம்கள் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது அவசரமான கோரிக்கை குறித்த மனுக்களை ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள பெட்டியில் போடுமாறு பொதுமக்களுக்கு ஆட்சியர் பிரபுசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

News March 16, 2024

திருவள்ளூர் அருகே ஆண் சடலம் மீட்பு

image

திருவள்ளூர்: மீஞ்சூர் அடுத்த மேலூர் சீமை குளத்தில் அடையாளம் தெரியாத மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் மீஞ்சூர் போலீசார் உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக இறந்திருக்கக்கூடும் என அறியப்படும் நிலையில் குளத்தில் தவறி விழுந்தாரா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 16, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 151 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, https://cra.tn.gov.in/-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!