Thiruvallur

News May 10, 2024

திருவள்ளூர் 35ஆவது இடம்!

image

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 80.06% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 74.24 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 85.85 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் 35ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

News May 10, 2024

திருவள்ளூர்: மழைக்கு வாய்ப்பு

image

கடந்த 4 நாட்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் வெயிலின் வெப்பம் 98 டிகிரி தாண்டி மக்களை வாட்டி கொண்டிருந்த நிலையில் நேற்று பரவலாக பெய்த மழையால் கடந்த 2 தினங்கள் குளிர்ச்சியான சூழல் காணப்படுகிறது. மேலும் 2 டிகிரி வெப்பம் குறையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் வேலைகளுக்கு செல்லும் பொதுமக்கள் மகிழ்ச்சி உள்ளனர். மேலும் ஆங்காங்கே மழை பெய்யும் என அறிவித்துள்ளனர்.

News May 10, 2024

10th RESULT: திருவள்ளூரில் 86.52% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் 86.52% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 82.52% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 90.56% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 10, 2024

தேசிய அளவிலான 50 பால் கிரிக்கெட் போட்டி

image

தேசிய அளவிலான 50 போட்டிகள் மே 6 முதல் 8 வரை ஆந்திர மாநிலம் ஒங்கோலில் நடைபெற்றது. இதில் தமிழக அணி சார்பாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து 12 வீரர்கள் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி நான்காம் இடம் பிடித்துள்ளனர். இதில் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து 5 வீரர்கள் பங்கு பெற்றனர். மாணவர்களுடன் தமிழ்நாடு 50 பால் கிரிக்கெட் சங்க செயலாளர் சீனிவாசன் மற்றும் காஞ்சிபுரம்  மாவட்ட செயலாளர் இராமதாஸ் சென்றிருந்தனர்.

News May 10, 2024

திருவள்ளூர்: முன்னாள் நகரமன்ற தலைவர் மறைவு

image

திருவள்ளூர் நகராட்சியில் முன்னாள் நகரமன்ற தலைவராக பதவி வகித்தவர் ராசகுமார். இவர் திமுக மூத்த நிர்வாகி ஆவார். திருவள்ளூரில் வசித்து வந்த இவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார். இவரது மறைவை ஒட்டி இன்று திமுக சார்பில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

News May 9, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (மே.09) 4 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News May 9, 2024

திருவள்ளூர்: நான் முதல்வன் நிகழ்ச்சி தொடங்கி வைப்பு

image

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி கூட்டரங்கத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்த மாணவ மாணவிகளுடைய திறன் வளர்ச்சி அடைவதற்கான நான் முதல்வன் கல்லூரி கனவு திட்டத்தின் முகாமினை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

News May 8, 2024

அண்ணனை சரமாரியாக வெட்டி கொலை செய்த தம்பி

image

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வெள்ளகுளம் கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (35). இவருடைய தம்பி தேவேந்திரன். சிவக்குமார் இவருடைய தம்பி மாமியாருடன் தகாத உறவில் இருப்பதாக தெரிந்துகொண்ட தேவேந்திரன் பட்டப்பகலில் அவரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்து விட்டு பொன்னேரி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 8, 2024

விளையாட்டு வீரர்களுக்கு சீருடை வழங்கல்

image

தொழுவூர் குப்பம் பகுதியில் J.R.S கால்பந்து குழு முன்னெடுப்பில் 25ஆம் ஆண்டு கோடைகால கால்பந்தாட்ட பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. அதையொட்டி பயிற்சியில் கலந்துக்கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு சீருடைகள் திமுக சார்பில்
திருவள்ளூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சே.பிரேம் ஆனந்த்
வழங்கினார். அனைவரும் சிறப்பான முறையில் பயிற்சி பெற வேண்டும் என வாழ்த்தினார்.

News May 8, 2024

வாகனத்தை மடக்கி வழிப்பறி: ஓட்டுநருக்கு வெட்டு

image

பள்ளிப்பட்டை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (68), லாரி ஓட்டுநர். இவர் நேற்றிரவு காஞ்சிபுரத்தில் லோடு இறக்கிவிட்டு அங்கிருந்து ஆர்.கே.பேட்டை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நாதன்குளம் அருகே நள்ளிரவு 12 மணிக்கு இவரது வாகனத்தை மறித்த இருவர், பணம் கேட்டு மிரட்டினர். பணம் இல்லை என்றதும், கத்தியால் ரகுமானை வெட்டிவிட்டு தப்பினர். புகாரின்பேரில் போலீசார் கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

error: Content is protected !!