India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கனகம்மாசத்திரம் அடுத்த நெடும்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவு படுத்தும் பணி ஆனது நடைபெற்று வருகிறது. அங்கு நுழைவு சாலை அமைக்க வேண்டி புரட்சி பாரத கட்சியின் சார்பில் போராட்டம் இன்று (ஜன.19 ) நடைபெற்றது. இதில் புரட்சிபாரதம் கட்சியின் சார்பாக மாவட்ட இனை செயலாளர் D.அருண் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் ராஸ்குட்டி.கிஷோர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

திருவள்ளூர் மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘<

தமிழ்நாடு சுகாதார துறையில், செவிலியர் உதவியாளர் (தரம்-2) 999 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th & Nursing Assistants Course முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்.08-க்குள் இங்கு <

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு அன்று காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொண்டு அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்தார்.

திருவள்ளூர்: ஒண்டிக்குப்பம் பகுதியில் சாலை ஓரமாக வளர்ந்திருந்த கஞ்சா செடியை காவல்துறையினர் இன்று (ஜன.19) கண்டெடுத்து பிடுங்கிச் சென்றனர். சமீபத்தில் இரட்டைக்கொலை நடைபெற்ற இடத்திலிருந்து வெறும் 500 மீட்டர் தொலைவிலேயே இந்த கஞ்சா செடி கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் (பிப்.04) அன்று மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெற வேண்டும் என திருவள்ளூர் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருவள்ளூர்: 2026 – 2027 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் (பிப்.2) முதல் (பிப்.28) வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9444139373 மற்றும் 8838522794 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

திருவள்ளூர் கலெக்டர் அறிவிப்பின் படி, வருகிற ஜன.21ஆம் தேதி காலை 9 மணிக்கு வேலைவாய்ப்பு முகாமில் தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் அவற்றின் கூட்டமைப்புகள் (Industry Clusters) கலந்து கொண்டு பயிற்சியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு dstotvlr2025@gmail.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது 8838522794, 9444139373 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். (SHARE IT)

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே.., வேலை தேடுபரா நீங்கள்..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு முன் அனுபவம் தேவை இல்லை. ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.33,300 வரை சம்பளம் வழங்கப்படும். தேர்வெழுதவும் அவசியமில்லை. விண்ணப்பிக்க <
Sorry, no posts matched your criteria.