India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவாலங்காடு அருகேயுள்ள பாகசாலை கிராமத்தில் நேற்று (ஜன.20) கல்லூரி மாணவர்கள் இருவரை கஞ்சா போதையில் வந்த மர்மநபர்கள் அரிவாளால் சராமரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். இதில், படுகாயமடைந்த அன்பரசு, அனீஷ் ஆகிய இருவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்ததை தட்டிக்கேட்டதால் கஞ்சா நபர்கள் மாணவர்களை வெட்டியது விசாரணையில் தெரிய வந்தது.

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., இந்த 2026-யில் வீடு கட்டுவது உங்கள் கனவா? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம், வீடு வாங்க, கட்ட மானியத் தொகை வழங்கப்படுகிறது. இதில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருமானம் கொண்டவர்கள், நடுத்தர வருமானம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க <

திருவள்ளூர்: இறுதி வாக்காளர் பட்டியல் (ஜன.30) அன்று வெளியிடப்படும். 18 வயது பூர்த்தி செய்த தகுதியானவர்கள் மற்றும் திருத்தம் தேவைப்படுவோர் https://voters.eci.gov.in அல்லது அருகிலுள்ள வாக்காளர் பதிவு மையங்களை அணுகி பயன்பெறலாம். எனவே புதிய வாக்காளர் சேர்த்தல், பெயர் முகவரி திருத்தம், வாக்காளர் நீக்கம் உள்ளிட்ட பணிகளை விரைவாக செய்ய வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்: இறுதி வாக்காளர் பட்டியல் (ஜன.30) அன்று வெளியிடப்படும். 18 வயது பூர்த்தி செய்த தகுதியானவர்கள் மற்றும் திருத்தம் தேவைப்படுவோர் https://voters.eci.gov.in அல்லது அருகிலுள்ள வாக்காளர் பதிவு மையங்களை அணுகி பயன்பெறலாம். எனவே புதிய வாக்காளர் சேர்த்தல், பெயர் முகவரி திருத்தம், வாக்காளர் நீக்கம் உள்ளிட்ட பணிகளை விரைவாக செய்ய வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் அடுத்த உளுந்தை கிராமத்தில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் பாபு(50). நேற்று முன் தினம் அவரது வீட்டில், குடும்பத்தினர் அனைவரும் வெளியே சென்றுள்ளனர். அப்போது, தனியாக இருந்த பாபு, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவள்ளூர்: ஆவடி அடுத்த பட்டாபிராம் தண்டுரை, மாங்குளம் பகுதியைச் சேர்ந்த தம்பதி பர்ஹான் அலி(61) – வஹிதா பானு(51). இவர்களுக்கு சாகித்(23) என்ற மகன் உள்ளார். இந்நிலையில், நேற்று முன் தினம், தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக, சாகித் தனது தாயிடம் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த வஹிதா பானு அதிகப்படியான முடக்குவாத மாத்திரைகளை உண்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (ஜன.20) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

திருவள்ளூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். Share பண்ணுங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.