Thiruvallur

News January 17, 2026

திருவள்ளூர்: ஹோட்டல் சாப்பாட்டில் குறைபாடா? CLICK HERE

image

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை தீவிர சோதனை நடத்தினாலும், தரமற்ற மற்றும் கலப்பட உணவு குறித்த புகார்கள் தொடர்கின்றன. ஹோட்டல்களில் சுகாதாரம் இன்றி உணவு வழங்கப்பட்டால், பொதுமக்கள் உடனடியாக 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உங்கள் புகார்களைப் புகைப்பட ஆதாரத்துடன் சமர்ப்பித்துத் தீர்வு பெறலாம். மேலும், மக்களிடையே இந்த விழிப்புணர்வு தகவலைப் பகிருங்கள்!

News January 17, 2026

திருவள்ளூர்: கொத்தடிமைகளாக இருந்த 24 பேர் மீட்பு

image

திருவள்ளூர் அடுத்த கண்ணூர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த 24 பேர் இன்று (ஜன.17) மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட 24 பேரும் தங்களது சொந்த மாநிலமான சத்தீஸ்கருக்கு அனுப்பி வைக்கப்படுவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து செய்துள்ளனர்.

News January 17, 2026

மாணவர்களுக்கு பயிற்சிப்பட்டறை நடத்தும் எம்பி

image

தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுவது எப்படி? என்ற பயிற்சிப்பட்டறை திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் மாணவர்களுக்கு வரும் 25 ஆம் தேதி நடத்த உள்ளார். இதற்குமுன் பதிவு செய்வதற்காக மேல் உள்ள க்யூ ஆர் யை ஸ்கேன் செய்ய வேண்டும். மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள: 9445500346 என்ற தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 17, 2026

திருவள்ளூர்: நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்!

image

திருவள்ளூர் மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்க!

News January 17, 2026

திருவள்ளூரில் குறைந்த விலையில் பைக்! DONT MISS

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க tnuwwb.tn.gov.in என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 17, 2026

திருவள்ளூர்: உங்க ஆதார் MISUSE ஆகுதா? (2/2)

image

<>இங்கு <<>>க்ளிக் செய்து myAadhaar போர்ட்டலுக்கு செல்லுங்கள். உங்களுடைய ஆதார் எண் & OTP-ஐ பதிவு செய்து Login செய்யுங்கள். அதில் Authentication history ஆப்ஷனை க்ளிக் செய்து, ஆதார் பயன்பாட்டு விவரங்களை பெற தேதியை தேர்ந்தெடுக்கவும். இதில் நீங்கள் எங்கெல்லாம் உங்கள் ஆதாரை யூஸ் பண்ணியிருக்கீங்க என்பதை தெரிஞ்சிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News January 17, 2026

திருவள்ளூர்: உங்க ஆதார் MISUSE ஆகுதா? CHECK NOW

image

தற்போது அரசின் சேவைகள் மட்டுமல்லாது, அனைத்திற்கும் ஆதார் தேவைப்படுகிறது. பல இடங்களில் நம்முடைய ஆதாரை நாம் தருகிறோம். அப்படியிருக்க, உங்களுக்கே தெரியாமல் ஆதார் misuse செய்யப்பட வாய்ப்புண்டு. <>இங்கு கிளிக் <<>>செய்து ஆதார் அட்டையை login செய்து misuse பண்றாங்களான்னு தெரிஞ்சுக்கோங்க. அப்படி இருந்தால், 1947 என்ற எண்ணில் புகார் செய்க. ஷேர் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க. <<<18879128>><-1>>தொடர்ச்சி<<<>><>>

News January 17, 2026

திருவள்ளூர்: 10ஆவது படித்தால் ரூ.46,000 சம்பளம்!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.46,000 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க பிப்.4ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 17, 2026

திருத்தணி கோயிலில் அனுமதி இல்லை!

image

திருவள்ளூர்: திருத்தணி சுப்பிரமணிய முருகன் மலைக் கோவிலுக்கு செல்ல இன்று (ஜன.17) ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. காணும் பொங்கலை முன்னிட்டு கோயிலுக்கு பக்தர்கள் அதிகம் வருவதால், மலைப்பாதை நுழைவுவாயில் இருந்து மலைக்கோயிலுக்கு செல்ல கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 17, 2026

திருவள்ளூர்: தலை நசுங்கி கொடூர பலி!

image

திருவள்ளூர்: மாதவரத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் (20). கல்லூரி மாணவரான இவர், நேற்று மதியம் பாடிக்குப்பம் சாலையில் டூவீலரில் சென்ற போது முன்னால் சென்ற தண்ணீர் லாரியை முந்திச்செல்ல முயன்றார். அப்போது லாரியின் மீது டூவீலர் உரசி நிலைதடுமாறி கீழே விழுந்ததில், லாரியின் சக்கரம் மாணவர் மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!