Thiruvallur

News February 24, 2026

திருவள்ளூர் கலெக்டரிடம் 668 மனுக்கள்!

image

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.23) நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் நிலம் சம்பந்தமாக 76, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை சம்பந்தமாக 180, சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 56, வேலைவாய்ப்பு வேண்டி 42, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 42, இதர துறைகள் சார்பாக 300 என மொத்தம் 668 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தினார்.

News February 23, 2026

திருவள்ளூர்: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

திருவள்ளூர் மாவட்ட மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

News February 23, 2026

திருவள்ளூரில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.23) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஆட்சியர் மு.பிரதாப் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். பெறப்பட்ட மனுவிற்கு தீர்வுக்கான சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்திரவிட்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஆகியோர் உள்ளனர்.

News February 23, 2026

திருவள்ளுர்: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு – APPLY!

image

திருவள்ளூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு 50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு <>க்ளிக் <<>>செய்து புகார் தெரிவியுங்க.. இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

News February 23, 2026

திருவள்ளூரில் 3 ஒப்பந்த பணியிடங்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின்படி, மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் (பிப்.26) மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி மற்றும் பிற விவரங்களுக்கு tiruvallur.nic.in-ல் வெளியிடப்பட்டுள்ளன.

News February 23, 2026

திருவள்ளூர்: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

திருவள்ளூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு க்ளிக்<<>> செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News February 23, 2026

FLASH: திருவள்ளூரில் வெளியானது வாக்காளர் பட்டியல்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 31,57,413 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் மொத்தம் 15,44,710 பேரும், பெண் வாக்காளர்கள் மொத்தம் 16,12,090 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 613 பேரும் உள்ளனர். உங்கள் பெயர் உள்ளதா என்பதை <<19214967>>இங்கு க்ளிக்<<>> செய்து தெரிந்துகொள்ளவும். SHARE NOW!

News February 23, 2026

கருத்து கேட்கும் கூட்டம் ஒத்திவைப்பு

image

திருத்தணி அடுத்த தேவசேனாபுரம், வள்ளியம்மாபுரம் கிராமங்களில், மொத்தம் 29.37 ஏக்கரில் சிமென்ட் நிறுவனம் அமையவுள்ளது. இதன் மூலம், ஆண்டுக்கு 3.50 மில்லியன் டன் சிமென்ட் உற்பத்தி செய்யப்படும்.
இதற்கான பொதுமக்கள் கருத்து கேட்கும் கூட்டம், நாளை காலை திருத்தணியில் நடைபெற இருந்தது. தவிர்க்க முடியாத காரணங்களால், ஒத்திவைக்கப்படுகிறது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News February 23, 2026

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு!

image

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்களில், மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், வரும் 27ம் தேதி காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவு, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மின்வாரியம், உள்ளிட்ட வேளாண் சார்ந்த துறை அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர் என ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

News February 23, 2026

திருவள்ளூரில் உங்களுக்கு ஓட்டு இருக்கா..? VERIFY

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., எஸ்.ஐ.ஆர் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உங்கள் தொகுதி பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா எனத் தெரிந்துகொள்ள <>இங்கே கிளிக் <<>>செய்து, உங்கள் விவரங்களை சரியாக அளிக்கவும். இந்த பயனுள்ள தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!