India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவள்ளூர் வாக்காளர்களே, தமிழ்நாட்டில் நேற்று வெளியான இறுதி வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் மிஸ் ஆகியிருக்கா? நோ டென்ஷன்! வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால், விடுபட்ட நபர்களின் பெயர்களை சேர்க்க தேர்தல் ஆணையம் 15 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. இந்த <

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் கண்டிகை கிராமத்தில் விஜயவாடாவைச் சேர்ந்த அடுக்கு ராஜா – சுதா தம்பதியர்கள் கிராமம் ஒட்டியுள்ள நீர்நிலை அருகே வாத்துக்கள் மேய்த்து வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களது மகன் தேவராஜ்(7) நேற்று(பிப்.23) இரவு 7 மணி அளவில் அருகே இருந்த நீர் நிலையில் மூழ்கி பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5) முதியோருக்கான அவசர உதவி -1253, 6) தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7) பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. மற்றவர்களுக்கும் உதவியாக அமைய இதனை ஷேர் பண்ணுங்க!

திருவள்ளூர்; ஆவடி போலீஸ் ஆணையகரத்தில் பணியாற்றி வந்த 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதுபடி, நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வந்த லாரன்ஸ், திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், திருநின்றவூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் , காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் கிருஷ்ணராஜ், நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் துரை(32). இவரின் மனைவி ஜெயஸ்ரீ(27). இவர், நேற்று முன் தினம் வாலாஜா செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு பைக் மோதியதில் விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஜெயஸ்ரீ, பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட கோவர்த்தனகிரி பகுதியில் ட்ரேடிங் பிளாட்ஃபார்மில் முதலீடு செய்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும் எனக்கூறி இணைய வழி மோசடி நபர்களுக்கு வங்கி கணக்குகளை கொடுத்து கமிஷன் பெற்று வந்தாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் டான் பாஸ்கோ அருளப்பன் (ம) சுரேஷ்குமார் ஆகிய இரண்டு நபர்களை கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து பணிக்கான விவரங்கள் தற்பொழுது காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. ஈடுபடும் காவலர்களின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. மக்களுக்காக இரவுநேர ரோந்து பணியினை ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் காவலர்கள் செயல்படுத்தி வருகின்றனர். இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.23) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட நடைபெற்றது. ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, அதற்கு தீர்வுக்கான சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உத்திரவிட்டார். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், கூடுதல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சார்ந்த இளைஞர்களுக்கு விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி வழங்கப்படவுள்ளது. 18 முதல் 35 வயது வரை உள்ளவர்களும், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சார்ந்த இளைஞர்களுக்கு விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி வழங்கப்படவுள்ளது. 18 முதல் 35 வயது வரை உள்ளவர்களும், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.