India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் புதன்கிழமை (ஆக.23-28) வரை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, இன்று மற்றும் நாளை (வெள்ளி, சனிக்கிழமை) திருவள்ளூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்து,18 வயது நிரம்பியோர், முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார். பயனாளிகள் தங்கள் பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் சமூக நல அலுவலர்களிடம் சேமிப்பு பத்திரத்தின் அசல், நகலுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் மாவட்ட சமூக நல அலுவகத்தை நேரிலோ, 044 29896049 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
திருத்தணியில் இருந்து முருக்கம்பட்டு வழியாக செல்லும் பேருந்தில் மாணவர்கள் நாள்தோறும் தொங்கியபடி செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இதனை அறிந்த திருத்தணி காவல்துறை ஆய்வாளர் மதியரசன் தலைமையிலான காவல்துறையினர், அப்பேருந்தில் தொங்கிய மாணவர்களை இறக்கி, பேருந்தில் தொங்கி செல்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிவுரை வழங்கினர். மேலும், பேருந்தில் தொங்கிய படி செல்ல மாட்டோம் என உறுதிமொழி ஏற்க செய்தனர்.
திருவள்ளூர் நகர போலீசார் நேற்று பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெரியகுப்பம் நாகூர் மீரான், வெங்கத்தூரை சேர்ந்த நூர்தீன் இருவரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடமிருந்து ரூபாய் 500, பில் புக், கால்குலேட்டர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
உயிர் வேளாண்மையில் சாகுபடி செய்கின்ற விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் குடியரசு தினத்தன்று முதலமைச்சரால் விருது வழங்கப்பட உள்ளது. அக்ரிஸ் நெட் வலைதளத்தில் செப்டம்பர் 15-க்குள் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் தேசிய தூய்மை பணியாளர் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தேசிய தூய்மை பணி ஆணையர் தலைவர் வெங்கடேசன், தமிழகத்தில் தூய்மை பணியாளர்கள் கழிவு நீர் அகற்றும் பணியில் ஈடுபடும் போது அதிகம் உயிரிழப்பு ஏற்படுவதற்கு முறையான விழிப்புணர்வு இல்லாததே காரணம் எனத் தெரிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உடனிருந்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ராஜேஷ், கோபி, குமரன் ஆகிய 3 பேர் இன்று கைது செய்யப்பட்டனர். புதூர் அப்பு என்பவரின் கூட்டாளியான ராஜேஷ், சம்போ செந்தில் மற்றும் கிருஷ்ணன் ஆகியோரோடு தொடர்பில் இருந்த கோபி, குமரன் கைது செய்யப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்னேரியில் இருந்து அரசு பேருந்து பழவேற்காடு சாலை வழியாக சின்னக்காவனம் கிராமத்தின் அருகே செல்லும்போது பேருந்தின் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதில் பேருந்து கண்ணாடி உடைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர். மீண்டும் மற்றொரு பேருந்து வர வைக்கப்பட்டு அந்த பேருந்தின் மீதும் கற்கள் வீசப்பட்டு கண்ணாடி உடைந்தது. செல்வகுமார், தூயவன் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (32). ஓதப்பையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர் சமீப காலமாக ஆன்லைனில் சூதாட்டம் ஆடி வந்ததாக தெரிகிறது. இதில் ரூ.2 லட்சம் வரை பணத்தை இழந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பென்னலூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரக்கோணம் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், இன்று மற்றும் நாளை மறுநாள் (ஆக.22, 24) ஆகிய தேதிகளில் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால் சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே காலை 9.10 மற்றும் 11 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள், 2 நாட்களிலும் திருவள்ளூர் – அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.