Thiruvallur

News February 26, 2026

திருவள்ளூர்: Whatsapp பண்ணுங்க.. உடனே தீர்வு!

image

திருவள்ளூர் மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News February 26, 2026

திருவள்ளூர் அருகே பயங்கர தீ விபத்து!

image

திருவள்ளூர்: தேர்வாய் கண்டிகை, சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ரசாயன ஆலையில் இன்று(பிப்.26) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பாண்டியன் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

News February 26, 2026

திருவள்ளூரில் ஒருவர் அதிரடி கைது!

image

திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் போலீசார் நேற்று(பிப்.25)
பேருந்து நிறுத்தம் பகுதியில் ரோந்துப் பணி மேற்கொண்டனர்.
அங்கு சந்தேகத்தின் பேரில் சுற்றித் திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் வியாசர்பாடியைச் சேர்ந்த யுவராஜ், மற்றும் மணவாளநகரைச் சேர்ந்த முரளி என்பவரிடம் பிரேசில் நாட்டு பணத்தை மாற்ற வந்ததும் தெரிந்தது. அவரைப் போலீசார் கைது செய்தனர்.

News February 26, 2026

பள்ளிப்பட்டு அருகே பைக் மோதி ஒருவர் பலி

image

திருவள்ளூர்: பள்ளிப்பட்டு அடுத்த கரலம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரய்யா(60). இவர், நேற்று(பிப்.25) அவரது வீட்டிற்கு எதிரே உள்ள மாட்டு கொட்டகைக்கு, சாலையை கடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில், சந்திரய்யா படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News February 26, 2026

திருவள்ளூர்: அனைத்து CERTIFICATES இனி Whatsapp-ல்!

image

திருவள்ளூர் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 26, 2026

பூந்தமல்லி அருகே அதிரடி கைது!

image

திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, படூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக வந்த 2 பேரை விசாரித்ததில் அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும், அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் அருகே மேவளூர் குப்பத்தைச் சேர்ந்த தீபக்(25), சரவணன்(24) எனத் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

News February 26, 2026

திருவள்ளூரில் ரவுடி கொடூரக் கொலை!

image

எல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல்(26). இவர் மீது கொலை, அடிதடி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று முன் தினம் இரவு, பெரியபாளையம் அருகே கோகுல், அதே பகுதியைச் சேர்ந்த தீனா(22), பேரரசு(20), சிவக்குமார்(21), தியாகு(19) மற்றும் ஒருவர் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது நடந்த வாக்குவாதத்தில் 5 பேர் சேர்ந்து கோகுலை சராமாரியாக வெட்டிக் கொன்றனர். இதில், 4 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

News February 26, 2026

திருவள்ளூர்: மது அருந்த பணம் தராததால் தற்கொலை!

image

கடம்பத்தூர் அடுத்த மப்பேடு பகுதியைச் சேர்ந்தவர் சோலையப்பன்(48). கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன் தினம் தனது மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். பணம் தர அவர் மறுத்ததால் மனமுடைந்த சோலையப்பன், வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 26, 2026

திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

image

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று (பிப்.25) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக  வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

News February 26, 2026

திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

image

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று (பிப்.25) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக  வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

error: Content is protected !!