India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 2 நாட்களில் வலுப்பெற்று தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதற்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. உங்களுடைய பகுதிகளில் மழை பெய்தால் தெரிவிக்கவும்.
வரும் 20.12.2024 வெள்ளிக்கிழமை அன்று திருவள்ளூர் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் காலை 10.00 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 25-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்கின்றன. வேலைவாய்ப்பு முகாமில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பொதுமக்களிடமிருந்து பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பொதுமக்களிடமிருந்து 465 மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பிற துறை சார்ந்த அலுவலர்கள் இருந்தனர்.
தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 2 நாட்களில் வலுப்பெற்று தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை கனமழையும் மற்றும் டிச.,18ஆம் தேதி மிக கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. உங்களுடைய பகுதிகளில் மழை பெய்தால் தெரிவிக்கவும்.
திருவள்ளூர் மாவட்டம், ஆரணி பேரூராட்சியில், ஆவடி முதல் ஆரணி வரை இருந்த 580 பேருந்து வழித்தடத்தை, புதுவாயல் வரை நீட்டித்து புதிய வழித்தடத்தை இன்று அமைச்சர் நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்து அப்பேருந்தில் ஏறி பயணம் மேற்கொண்டார். உடன் கோவிந்தராஜன் எம்.எல்.ஏ, துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ மற்றும் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் அருகே தாமரைப்பாக்கம் மற்றும் மெய்யூர் பகுதியில் கடந்த மாதம் 30ஆம் தேதி இரவு டாஸ்மாக் கடையில் துளையிட்டு 5.5லட்சம் ரூபாய் மதிப்பிலான 2700 மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வெங்கல் மற்றும் பெரியபாளையம் போலீசார் பிரபாகரன், வீரமணி, முத்து, ஸ்டீபன், இசக்கிமுத்து, தர்மேந்தர் ஆகிய 6 பேரை கைது செய்து 2700 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று (16ம்தேதி) நள்ளிரவில் மழை பெய்யத் தொடங்கி அதிகாலையில் தீவிரம் அடையத் தொடங்கும் என்றும், அதன் தொடர்ச்சியாக நாளை மறுதினம் திருவள்ளூரில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி சாலையில் கடந்த 16ஆம் தேதி, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த சாலையோர கடைகளை அகற்றினர். தொடர்ந்து, சாலையோரம் கடை நடத்தி வந்த நரிகுறவர்கள் தங்களுக்கு முறையான கடைகள் ஒதுக்கப்படவில்லை என பேரூராட்சி நிர்வாகத்தின் மீது புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் கடைகளை அகற்ற வந்த நெடுஞ்சாலை துறையினருக்கும், நரிக்குறவர் இன பெண்களுக்கும் இன்று தகராறு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சமுதாய நல்லிணக்கத்திற்கான ‘கபீர் புரஸ்கார்’ விருது, ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினத்தன்று வழங்கப்படும். நடப்பு ஆண்டிற்கான, ‘கபீர் புரஸ்கார்’ விருதுக்கு, சமுதாய நல்லிணக்க செயல் புரிந்தோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தினை இன்றுக்குள் , https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் அடுத்த புழல் மத்திய சிறையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் புழல் சிறைக்குள் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். செல்போன் சிக்னல் மூலம் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.