India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவள்ளூர் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மர்ம பொருள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஏடிஎம் அறையில் வைக்கப்பட்ட கேமரா மற்றும் ஹார்ட் டிஸ்க் ஆக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வாய்ப்பு தரப்பட்டால், மப்பேடு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் நிறைவுப் பணி, மாம்பழ விவசாயிகளுக்கு குளிரூட்டும் தளம்(Mango freezer zone), மணவாளநகரில் டைட்டல் பார்க் ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்படுமென எம்.எல்.ஏ வி.ஜே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதில், எந்தத் திட்டம் உடனடி தேவை? தேர்தலில் யாருக்கு வாய்ப்பு அளிக்கலாம்? என உங்களது கருத்துகளை கீழே கமெண்ட் பண்ணுங்க!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்கள் வீட்டு இல்லத்தரசிகள் சுயமாக தொழில் தொடங்க உதவும் நோக்கத்தில், அரசு சார்பாக ‘கிரைண்டர் மானிய திட்டம்’ உள்ளது. இதன் மூலம், பெண்களுக்கு ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

திருவள்ளூர்: திருத்தணியைச் சேர்ந்தவர் 15 வயது மாணவர். இவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று (மார்ச்.11) தமிழ் பொது தேர்வை எழுதிவிட்டு வீடு திரும்பியவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெற்றோர் அவரை மீட்டு திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்களை 044-22321090 / 22321085, 044-22310989 / 22342142 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தையும் (044-27667070) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் கொடுங்கள். லஞ்சம் வாங்குவது குற்றம்! ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.