Thiruvallur

News March 13, 2026

ஆவடி: ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.40 லட்சம் இழப்பு!

image

திருவள்ளூர்: ஆவடியைச் சேர்ந்த சுஜாதா நாதன் (50) என்பவர், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்ற விளம்பரத்தை நம்பி, தனது வங்கி கணக்கில் ரூ.40 லட்சத்து 32 ஆயிரத்தை செலுத்தினார். ஆனால், கூறியபடி இரட்டிப்பு தொகை வராததால் தான் ஏமாற்ற பட்டதை உணர்ந்தார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஆவடி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 13, 2026

திருவள்ளூர்: கேஸ் புக் செய்ய முக்கிய எண்கள்

image

வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும், பதிவு வசதி தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. (SHARE IT)

News March 13, 2026

JUST IN: திருவள்ளூர் கலெக்டர் அதிரடி உத்தரவு!

image

திருவள்ளூரில் 14 வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார். பார்த்தசாரதி, மணிசேகர், குணசேகர், ரவி, சவுந்தரி, பிரபாவதி உள்ளிட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றங்கள் பள்ளிப்பட்டு, எல்லாபுரம், மீஞ்சூர், கடம்பத்தூர், திருவள்ளூர், திருவாலங்காடு போன்ற வட்டாரங்களில் நடைபெற்றுள்ளன.

News March 13, 2026

JUST IN: கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் வன்கொடுமை!

image

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே 45 வயது பெண், கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் உள்ள ஏரிக்கரை வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது, மூன்று பேர் கொண்ட கும்பல், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து புகாரில், கும்மிடிப்பூண்டி மகளிர் போலீசார் ரஞ்சித், அவரது தம்பி முத்துகிருஷ்ணன், துளசிராமன் ஆகியோரை கைது செய்தனர்.

News March 13, 2026

திருவள்ளூர் பெண்களே.. இதை SAVE பண்ணிக்கோங்க!

image

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள்&குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள்&குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம்-01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்!

News March 13, 2026

திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

image

ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம்தொடர்பான குறைதீர் முகாம் நாளை(மார்ச் 14) மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் தங்களது மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் இருந்தால் கலந்துகொண்டு பயனடையலாம். மேலும், வரும் 25ஆம் தேதிக்குள் கை விரல் ரேகையை பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

News March 13, 2026

திருவள்ளூரில் இளைஞர் துடிதுடித்து பலி

image

பொதட்டூர்பேட்டை அடுத்த கோண சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவர்தனன், இவருடைய மகன் சரவணவேல்(17). இவர் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த நண்பருடன் பைக்கில் செல்லும்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ மோதி பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பொதட்டூர்பேட்டை போலீசார் நேற்று(மார்ச் 12) வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News March 13, 2026

திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

image

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று (மார்ச்.12) இரவு 10 மணி முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

News March 13, 2026

திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

image

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று (மார்ச்.12) இரவு 10 மணி முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

News March 12, 2026

திருவள்ளூர்: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

image

திருவள்ளூர் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!