Thenilgiris

News December 27, 2024

2 வது மயக்க ஊசி போட போக்கு வரத்து நிறுத்தம்

image

மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமையில் கால்நடை மருத்துவர்கள் கலைவாணன் மற்றும் ராஜேஷ் குமார் ஆகியோர் உள்ளிட்ட வன துறையினர் புல்லட் யானையை ட்ரோன் கேமராவில் கண்காணித்து அய்யன்கொல்லியில் ஒரு மயக்க ஊசி போட்டனர். இந்த நிலையில் மேலும் ஒரு ஊசியை செலுத்த தயாராகி வருகின்றனர். இதனால் கொலப்பள்ளி, அய்யன்கொல்லி சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

News December 27, 2024

புல்லட் யானைக்கு போடபட்ட மயக்க ஊசி 

image

நீலகிரியில் கடந்த ஒரு வாரமாக குடியிருப்பு வாசிகளை கதி கலங்க வைத்து 75 வன துறையினருக்கு போக்கு காட்டிய புல்லட் யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் கால்நடை டாக்டர்கள் கலைவாணன், ராஜேஷ்குமார் ஆகியோர் ட்ரோன் மூலம் கண்காணித்து அய்யன்கொல்லியில் வைத்து ஒரு ஊசியை செலுத்தி உள்ளனர்.

News December 27, 2024

கும்கி யானைக்கு மதம் புல்லட் பிடிப்பதில் தொய்வு

image

நீலகிரி புல்லட் யானையை பிடிக்க வந்த கும்கி யானை மக்களை அச்சுறுத்தி வருவதாகவும், வீட்டை இடித்து சேதம் படுத்துவதாக தொடர்ந்து மக்கள் புகார் வைத்து வந்தனர். இதை பிடிக்க பொம்மன் என்ற கும்கி யானை வரவழைக்க பட்டது. அதற்கு மதம் பிடித்ததால் கட்டி வைத்து உள்ளனர். இதனால் புல்லட்டை பிடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது.

News December 27, 2024

திமுக ஐடி விங் கோவை நோக்கி பயணம்

image

கோவை மாவட்டத்தில் நடைபெறும் திமுக கட்சியின் மண்டல அளவிலான நடைபெறும் தகவல் தொழில்நுட்ப அணியின் ஆய்வு கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக திமுக நீலகிரி மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் வழிகாட்டுதலின்படி தகவல் தொழில்நுட்ப மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன் தலைமையில் கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர்கள் கோவை நோக்கி பயணம் மேற்கொண்டனர்.

News December 27, 2024

கோத்தகிரியில் ஆய்வு செய்த ஆட்சியர்

image

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குஞ்சபண்ணை ஊராட்சி, அரியூர் மட்டம் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூட கட்டுமான பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். கூடுதல் ஆட்சியர் கௌசிக் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News December 27, 2024

லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு

image

கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சப்பனை பகுதியில் இரவில் கோத்தகிரி பகுதிக்கு சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதனால் சாலையில் வாகனம் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் கோத்தகிரிக்கு வழியாக வரும் வாகனத்தை குன்னூர் வழியாக அனுப்பி வைத்தனர். பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு பின்பு சாலையை சீர் செய்யப்பட்டது.

News December 27, 2024

உதகையில் இன்று மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி

image

முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் அவர்களது மறைவுக்கு நீலகிரி காங்கிரஸ் கமிட்டி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது. மேலும் உதகை, காபி ஹவுஸ் பகுதியில் இன்று முற்பகல் 11:45 மணியளவில் டாக்டர் மன்மோகன் சிங்கின் திருஉருவப்படத்திற்கு மலர் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது .இந்த தகவலை நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.கணேஷ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

News December 27, 2024

நீலகிரியில் புல்லட் யானை: வனத்துறை தகவல்

image

பந்தலூரில் புல்லட் என்ற காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தமிழ்நாடு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவிட்டுள்ளார். யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மயக்க ஊசி செலுத்தி பிடிபடும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதா? அல்லது கும்கி பயிற்சி கொடுத்து முகாமில் பராமரிக்கப்படுமா? என பின்னர் முடிவு செய்யப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

News December 27, 2024

நீலகிரி: ஒரேநாளில் படையெடுத்த 18,000 சுற்றுலாப் பயணிகள்

image

விடுமுறையையொட்டி நீலகிரியில் சுற்றுலா பயணிகள் குவிந்துவருகின்றனர். நேற்று ஒரேநாளில் 18,590 சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டுகளித்து பரவசமடைந்துள்ளனர். இது குறித்து வெளிவந்த தகவலின்படி தாவரவியல் பூங்காவை 12,477 பேரும், ரோஜா பூங்காவை 3,000 பேரும், குன்னூர் சிம்ஸ்ஸ் பார்க் பூங்காவில் 2,202 பேரும், தேயிலைப் பூங்காவை 409 பேரும், காட்டேரி பூங்காவை 412 பேரும், ஒரே நாளில் கண்டு ரசித்துள்ளனர்.

News December 27, 2024

நீலகிரி: கோர்ட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

image

நெல்லை கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்த மாயாண்டி என்ற வாலிபர் சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றம் அருகே வெட்டி கொல்லப்பட்டார். இது குறித்து தானாக முன்வந்து விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து கூடலூர்-மைசூரு சாலையில் அமைந்துள்ள கோர்ட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவலுக்கு பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!