Theni

News February 21, 2025

தேனி மாவட்ட விவசாயிகளே கிளம்பியாச்சா?

image

தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.02.25 இன்று காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. தேனி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைகள் சம்பந்தமான திட்டங்கள் குறித்த கோரிக்கைகளை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News February 21, 2025

மாவட்டத்தில் சிற்றுந்துகள் இயக்க 34 வழித் தடங்கள் தேர்வு

image

தேனி மாவட்டத்தில் புதிதாக சிற்றுந்துகள் இயக்க 34 வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்குவதற்கான உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்க வருகிற மார்ச் 14-ம் தேதி வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 20, 2025

தேனியில் 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது

image

தேனி மாவட்ட குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் கன்னியப்பபிள்ளைப்பட்டி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு ஆம்னி வேனை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் வேனில் 6 மூட்டைகளில் 300 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் ரேஷன் அரிசியை விற்பனைக்காக கடத்தி வந்த சக்திகுமார் என்பவரை கைது செய்தனர்.

News February 20, 2025

தேனியில் வேலைவாய்ப்பு முகாம்

image

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (பிப்.21) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் 10ம் வகுப்பிற்கு கீழ் கல்வித்தகுதி உடையவர்கள், பிளஸ் 2, ஐ.டி.ஐ., பட்டப்படிப்பு, நர்ஸிங், தையல் பயிற்சி முடித்தவர்கள், சுயவிபர நகல், கல்விச்சான்றுகள் நகல்களுடன் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 76959 73923 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். *ஷேர்

News February 20, 2025

கல்லூரி மாணவர் மரணம்; பழங்குடி ஆணையம் தலையீடு

image

போடிநாயக்கனூர் அரசு பொறியியல் கல்லூரி மாணவர் விடுதியில் எறும்பு கடித்து இரத்தம் வந்ததாக கூறப்பட்ட மாணவர் விக்னேஷ் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை வேண்டி நடத்தப்பட்ட போராட்டத்தை,தேசிய பட்டியல்/பழங்குடி ஆணையம் தாமாக முன்வந்து தேனி/நெல்லை ஆட்சியர்களிடமும் காவல் கண்காணிப்பாளர்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய அறிவிப்பு.

News February 20, 2025

காரை மறித்து ரூ.7.5 லட்சம் வழிப்பறி; 8 பேரிடம் விசாரணை

image

தேனியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உள்ளார். இவர் நேற்று(பிப்.19) தனது காரில் ரூ.7.5 லட்சம் வைத்து கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மற்றொரு காரில் வந்த கும்பல் ஒன்று ராமகிருஷ்ணன் காரை வழிமறித்து அவரை தாக்கி விட்டு பணத்தை எடுத்து சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் காரில் சென்ற 8 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 19, 2025

பாஜகவில் உறுப்பினர்களாக இணைந்த இளைஞர்கள்

image

தேனி‌ மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் P.இராஜபாண்டியன் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து இளைஞர்கள் விலகி தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இன்று உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் P.C.பாண்டியன், மாவட்ட, நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் உடனிருந்தனர்.

News February 19, 2025

வைகை அணையில் இருந்து 600 கன அடி தண்ணீர் திறப்பு

image

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து ஒருபோக பாசன நிலங்களுக்காக முறை பாசனத்தின் படி தண்ணீரின் இருப்பை பொருத்தும் மழை அளவை பொருத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களாக நிறுத்தப்பட்ட தண்ணீர் இன்று காலை மீண்டும் ஒருபோக பாசன நிலத்திற்கு 600 கன அடி தண்ணீர் அணையில் இருந்து திறக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 63.29 கன அடியாக உள்ளது.

News February 19, 2025

தேனி மாவட்டத்தில் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு

image

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு சார்பில் இன்று காலை 10 மணியளவில் ரயில்வே பாலம் பணிகள் பார்வையிடல், NADP மையம் பார்வையிடல், பெரியகுளம் வேளாண்மை துறை சார்பில் வேளாண் இயற்கை இடுபொருள் மையம் பார்வையிடுதல், விவசாயிகளை சந்தித்தல், வீரபாண்டி திருக்கோவில் திருப்பணிகள் பார்வையிடல், சின்னமனூர் நகராட்சியில் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு பணிகள் பார்வையிடல் முதலிய ஆய்வுகள் நடைபெற உள்ளது.

News February 19, 2025

தேனி: லாரி ஓட்டுநர்கள் சாலை மறியல்

image

கேரள போலீசாரை கண்டித்து லாரி ஓட்டுநர்கள் சாலை மறியல்தமிழக கேரள எல்லையான கம்பம் மெட்டு சோதனை சாவடியில் நேற்று (பிப்.18) கேரள போலீசார் தமிழக லாரி ஓட்டுனர் ஒருவரை தாக்கியதுடன் அவரை கைது செய்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து தமிழக லாரி ஓட்டுனர்கள் லாரி ஓட்டுநரை தாக்கியதை கண்டித்தும், அவரை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் கம்பம் மெட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

error: Content is protected !!