Theni

News April 26, 2024

தேனியில் மதிக்கத்தக்க ஆங்கிலேயரின் மணிமண்டபம்!

image

பென்னிகுவிக் மணிமண்டபம் கூடலூர் அருகே லோயர்கோம்பட் பகுதியில் அமைந்துள்ளது. இது மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டப் பகுதிகளின் விவசாயத்திற்கும், பாசன வசதிக்காகவும் முல்லை பெரியார் அணையைக் கட்டிய ஆங்கிலேயர் ஜான் பென்னிகுவிக் நினைவாக கட்டப்பட்டது. 1895ஆம் ஆண்டு ராணுவ பொறியாளராக இந்தியாவிற்கு வந்த அவர், வறட்சியைக் கண்டு பெரியார் ஆற்றில் பல தடைகளைத் தாண்டி இவ்வணையைக் கட்டினார்

News April 26, 2024

தேனி அருகே அரிவாள் வெட்டு

image

காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மாமனாருக்கும் உறவினர் பாண்டியனுக்கும் நேற்று தகராறு ஏற்பட்டது. கணேசன் மாமனாருக்கு ஆதரவாக பேசி அவரைக் காப்பாற்ற முயன்றார். அதனால் கோபமடைந்த பாண்டியன் கையில் இருந்த அரிவாளால் கணேசனை தலை மற்றும் கையில் வெட்டினார். இதில் காயமடைந்த அவர் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து இராயப்பன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 26, 2024

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

image

கம்பம் தெற்கு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜமீன்தார் சக போலீசாருடன் நேற்று ரோந்து சென்றபோத கம்பம் ஆங்கூர் பாளையம் ரோடு நகராட்சி குப்பை கிடங்கு அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை கம்பத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் விற்றுக்கொண்டிருப்பதை கண்டனர். போலீசார் அவரை சோதனையிட்டு அவரிடம் இருந்த 72 லாட்டரி சீட்டுகளையும்,லாட்டரி விற்ற பணம் ரூ. 900 யும் கைப்பற்றி அவரை கைது செய்தனர்.

News April 25, 2024

போக்சோ குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை

image

தேனி பகுதியைச் சேர்ந்த 15-வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அஜித் என்பவரை 2019-ம் ஆண்டு தேனி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கின் தீர்ப்பாக இன்று குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதைத்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.

News April 25, 2024

குண்டு சுடும் பயிற்சி

image

தேனி மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் அணைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு வருடம் தோறும் குண்டு சுடும் பயிற்சி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், தேவதானப்பட்டி பகுதியில் அமைந்துள்ள குண்டு சுடும் பயிற்சி தளத்தில் வருகின்ற 26.04.2024 முதல் 18.05.2024 வரை தேனி மாவட்டத்தை சேர்ந்த காவல் துறையினருக்கு குண்டு சுடும் பயிற்சி நடைபெற உள்ளது என மாவட்ட காவல் துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.

News April 25, 2024

இலவச அழகுக் கலைப் பயிற்சி

image

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் வருகின்ற 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை பெண்களுக்கு இலவச அழகுக் கலைப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. பயிற்சியில் சேர விரும்புவோா் தங்களது ஆதாா் அட்டை நகல், புகைப்படம் ஆகியவற்றுடன் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9500314193 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என பயிற்சி நிலைய இயக்குநா் அறிவித்துள்ளார்.

News April 25, 2024

அரசுப் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பிரச்சாரம்

image

தேனி மாவட்டம் கம்பம் முகையதீன் ஆண்டவர்புரம் நகராட்சி துவக்கப்பள்ளி சார்பில் இன்று அரசுப்பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வேண்டி அரசு வழங்கும் நலத்திட்டங்களை துண்டு பிரசுரங்களில் அச்சிட்டு பள்ளி தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் கம்பம் சாதிக் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பேரணியாக சென்று பொதுமக்களிடம் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பிரச்சாரம் செய்தனர்.

News April 25, 2024

கறிக்கோழி, முட்டை கொண்டு வர தடை

image

கேரளாவில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் அங்கு பறவை காய்ச்சல் வைரஸ் கிருமி பரவி உள்ளது உறுதியானது. இதனால் அப்பண்ணைகளில் வளர்ந்த கோழி, வாத்துக்கள் உடனடியாக அழிக்கப்பட்டு வருகிறது. இதனால் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் தேனி மாவட்டம் வழியாக வாகனங்களில் கொண்டு வரப்படும் கோழிகள், வாத்துக்கள், தீவனங்களுக்கு தற்காலிக தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

News April 25, 2024

முத்து மாரியம்மன் கோவில் வழிபாடு

image

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஆண்டுக்கு ஒரு முறை கம்பம் அருகே உள்ள மின் நிலையத்தில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவில் வழிபாடு வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். சுருளி ஆறு மின் நிலையத்தில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் கோவில் ஊர் மக்கள் தீச்சட்டி எடுத்தும் வாய் பூட்டு போட்டும் அம்மனுக்கு நேர்த்திக் கடனை நிறைவேற்றுவார்கள். பக்தர்களுக்கு நேற்று முழுவதும் சிறப்பு அன்னதானம் வழங்கபட்டது.

News April 24, 2024

தேனியில் தொடரும் கண்காணிப்பு !

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நிலையிலும் 13 மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அவற்றை ஒட்டியுள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் பறக்கும் படைகளும், நிலைக்குழுக்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.அதன்படி தேனி மாவட்டத்திலும் கண்காணிப்பு தொடர்கிறது.

error: Content is protected !!