India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்ட மக்களே, உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு<

தேனி மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்ற…
1. இங்கு <
2. வாகன எண், சேசிஸ் கடைசி 5 எண்கள், Form 35,வங்கி NOC பதிவு பண்ணுங்க.
3. சரிபார்த்த பின் புதிய RC கிடைக்கும்.
மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

தேனி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

கூடலூர் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனி (34). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு திடீரென ஜனார்த்தனிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன நிலையில், வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். கம்பம் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தேனி அழைத்து சென்ற பொழுது அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கூடலூர் போலீசார் வழக்கு (ஜன.4) பதிந்துள்ளனர்.

தேனியில் கந்துவட்டி தொழில் அதிகம் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. வட்டிக்கு பணம் வாங்குபவர் பெரும்பாலும் விவசாயிகள், சிறுவியாபாரிகள், கீழ்நிலை ஊழியர்களே இவர்களிடம் குறைந்த தொகையை கடன் கொடுத்துவிட்டு அவர்களின் நிலம், வீட்டை தங்களின் பெயர்களுக்கு மாற்றி கொண்டு அதிக வட்டியை பெறுகின்றனர். இதில் யாரேனும் சிக்கி கொண்டால் உடனே 88709 -85100, 94443- 96596 இந்த எண்களில் புகராளிக்கலாம். SHARE பண்ணுங்க

சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது 8 வயது மகளான கவின்யா நேற்று (ஜன.4) அவரது தாயாரின் சால் துணியால் தூரி கட்டி விளையாடிக் கொண்டிருந்துள்ளார். திடீரென துணி சிறுமியின் கழுத்தில் இறுக்கிய நிலையில் அவர் மயக்கம் அடைந்தார். சிறுமியை மீட்டு மருத்துவமனை அழைத்துச் சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

ஆண்டிபட்டி, டி.பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராம்குமார். இவரிடம் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை சேர்ந்த சந்திரசேகரன் (77) என்பவர், தான் ஓய்வு பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி என்று ராம்குமாரிடம் அறிமுகமாகி அரசு வேலை வாங்கி தருவதாக, ஆவணத்தை போலியாக கொடுத்து ரூ.2.50 லட்சம் பணம் பெற்றுள்ளார். இந்த மோசடி சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தேனி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <

பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் வேல்விழி (63). இவருக்கு சில மாதங்களாக நுரையீரல் பிரச்சனை இருந்து வந்த நிலையில் அதற்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இருந்த போதிலும் சரியாகாத காரணத்தால் மன உளைச்சலில் இருந்த அவர் அதிகளவில் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் வேல்விழி (63). இவருக்கு சில மாதங்களாக நுரையீரல் பிரச்சனை இருந்து வந்த நிலையில் அதற்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இருந்த போதிலும் சரியாகாத காரணத்தால் மன உளைச்சலில் இருந்த அவர் அதிகளவில் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.