Theni

News September 12, 2024

ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம்

image

வீரபாண்டி அருகே வயல்பட்டி கிராமத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகள் சார்பாக 151 பயனாளிகளுக்கு ரூ.3.35 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவியை மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்தனர்.

News September 11, 2024

போலீசார் உட்பட 4 பேர் மீது வழக்கு

image

தேனி அல்லிநகரத்தை சேர்ந்த வீரப்பன் கடந்த ஜூன் மாதம் சிகிச்சையில் இருந்த அம்மாவை பார்ப்பதற்காக நள்ளிரவில் சென்ற போது தேனி அரசு மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டு, அங்கு வந்த வீரபாண்டியை எஸ்எஸ்ஐ போலீசார் கோபால் தகாத வார்த்தையில் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் வீரப்பன் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் எஸ்எஸ்ஐ உட்பட 4 பேர் மீது க.விலக்கு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News September 11, 2024

கடனுதவி பெற லோன் மேளாக்கள் ஆட்சியர் அறிவிப்பு

image

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனிநபர் கடன், குழுக்கடன், மாட்டுக்கடன் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான லோன் மேலாக்கள் கூட்டுறவு நிறுவனங்களில் செப்.13,20,30 அன்று காளை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவதாக ஆட்சியர் ஷஜீவணா தெரிவித்துள்ளார்.

News September 11, 2024

தேனி மாவட்டத்தில் 1 மணிக்குள் மழை

image

தமிழ்நாட்டில் இன்று பிற்பகல் 1 மணிக்குள் தென்காசி, குமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்திலும் பிற்பகல் 1 மணிக்குள் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 11, 2024

தேனி: வேலை நிறுத்தத்தில் 342 ஆசிரியர்கள் பங்கேற்பு

image

தேனி மாவட்டத்தில் 622 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் ஆரம்பப் பள்ளிகள் உள்ளன. இந்நிலையில் நேற்று (செப்.10) டிட்டோ ஜாக் அறிவித்த ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் 430 ஆசிரியர்கள் பங்கேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதில் 88 பேர் நீண்ட விடுப்பில் உள்ள நிலையில் போராட்டத்திற்கு ஆதரவாக 342 ஆசிரியர்கள் பங்கேற்று பள்ளிக்கு வராமல் ஆப்சென்டாகினர்.

News September 11, 2024

திருப்பூர் நிர்வாகிகள் ஓபிஎஸ்-ஐ சந்தித்தனர்

image

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின், ஆதரவாளர்கள் நேற்று பெரியகுளம் அக்ரஹாரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இல்லத்துக்கு நேரில் வந்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். மேலும் நிர்வாகிகள் ஓ பன்னீர் செல்வத்துக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.

News September 11, 2024

வீரபாண்டி பகுதியில் மின்தடை என அறிவிப்பு

image

தேனி அருகே உள்ள வீரபாண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(12) நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வீரபாண்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பாா்பட்டி, சடையால்பட்டி, பழனிசெட்டிபட்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 10, 2024

இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது. அதன்படி தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News September 10, 2024

தொழிற்தேர்வில் கலந்து கொள்ள அழைப்பு

image

தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் (NCEVT) நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொள்வதற்கான விண்ணப்ப விளக்க குறிப்பு மற்றும் பிற விபரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செப்டம்பர் 16 ஆம் தேதிக்கு முன்னர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் ஷஜீவனா தகவல் தெரிவித்துள்ளார்.

News September 10, 2024

பெரியகுளத்தில் நாளை உயர்வுக்கு படி திட்ட முகாம்

image

பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லுாரியில் நாளை (செப்.11) உயர்வுக்கு படி திட்ட முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து முகாமிற்கு அழைத்து வர தலைமை ஆசிரியர்கள், போலீசார், குழந்தைகள் நல குழு உள்ளிட்ட அரசு துறைகளை ஒருங்கிணைத்து குழு அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தேனி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 3 ஆயிரம் மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!