India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆண்டிபட்டி தாலுகாவுக்கு உட்பட்ட கடமலை மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செப்.18 அன்று கலெக்டர் ஆய்வு நடத்தினார். இதில் அங்கு பணிபுரியும் இளநிலை உதவியாளர் சரவணன் பணியில் இல்லாதது தெரியவந்தது. விசாரணையில், சரவணன் 14 நாட்களுக்கும் மேலாக உரிய தகவல் தெரிவிக்காமல், பணிக்கு வாராமல் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

உத்தமபாளையத்தை சேர்ந்த 22 வயதான நர்சிங் கல்லூரி மாணவி நேற்று காலை தேனி பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார்.அப்போது பெண் உட்பட 7 பேர் கொண்ட கும்பல் அந்த மாணவியை காரில் கடத்தி திண்டுக்கல் வந்தது.வழியிலே பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் அருகே வந்ததும் மாணவியை இறக்கவிட்டு தப்பினர். மாணவி மகளிர் போலீசாாரிடம் சம்பவத்தை கூறினார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா, பிரதமர் மோடி பிறந்தநாள் விழாக்களை முன்னிட்டு ஆண்டிபட்டி ஒன்றிய பாஜக சார்பில் செப் 28ல் மினி மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. பெண்களுக்கு 5.5 கி.மீ. தூரமும், ஆண்களுக்கு 9.5 கி.மீ. தூர போட்டியும் நடைபெற உள்ளது. மாரத்தான் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் 9080687958 என்ற எண்ணில் செப்.26க்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என தேனி மாவட்ட பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக 2099 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வைகை அணைக்கு நீர் வரத்தாக 1013 தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் வெளியேற்றத்தை விட நீர்வரத்து குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 58.76 அடியாக குறைந்து காணப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்த கேரள மாணவியை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விட்டுச் சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இன்று தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் பள்ளியின் அடிப்படை வசதிகள் தொடர்பாக ஆய்வு செய்தார். அப்போது பள்ளி கட்டிடங்கள் மற்றும் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் சரியாக உள்ளதாக ஆய்வு செய்து அங்குள்ள ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். இதில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் உடன் இருந்தார்.

தேனியில் கஞ்சா புழக்கத்தை தடுக்க எஸ்பி சிவபிரசாத் உத்தரவின் பேரில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில், நேற்று 18- ஆம் கால்வாய் பகுதியில் ஒரு காரை போலீஸாா் சோதனையிட்டதில் 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்தனா். விசாரணையில், கம்பத்தை சேர்ந்த முருகேசனுக்கு (44) இதில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தேனியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், முன்னாள் முதல்வா் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு செப்.28 அன்று 17 வயதிற்குட்பட்டவர்களுக்கு விரைவு மிதி வண்டி போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்க வருபவர்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து பெற்ற வயது சான்றிதழ், வங்கி கணக்கு பாஸ் புத்தகம், ஆதாா் அட்டை நகல்களை கொண்டுவர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டிபட்டி, ஏத்தக்கோவில் ஒண்டிவீரன் கோயில் அருகே செப்.16 அன்று யானைகள் வந்து சென்றதற்கான தடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யானைகள் நடமாட்டம் கேமரா மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அப்பகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு யானைகள் வந்தால் விவசாயிகள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். யானையை விரட்டும் போது வனப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தேனியில் விநாயகர் சதுர்த்தியின்போது டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட டிராக்டர் ஓட்டுநர் விநாயகமூர்த்தி அளித்த ஜாமின் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி தேனி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பா.அருண்குமார் இடையீட்டு மனு தாக்கல் செய்தார். அவரின் மனுவை ஏற்று டிராக்டர் ஓட்டுநர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Sorry, no posts matched your criteria.