Theni

News January 16, 2026

தேனி: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

image

தேனி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு <>க்ளிக் செய்து<<>> (Bharatgas, indane, HP) எந்த நிறுவனம் என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், ஐஎப்எஸ்சி கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் CREDITED குறுஞ்செய்தி வரும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 16, 2026

தேனி: மது விற்பனை செய்த இளைஞர் கைது

image

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி காவல் நிலைய போலீசார் சட்ட விரோத மது விற்பனை சம்பந்தமாக நேற்று (ஜன.15) தேவதானப்பட்டி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அஜித் (26) என்பவர் பொது இடத்தில் வைத்து மது விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த 26 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக அஜித் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

News January 16, 2026

தேனி: EMI-ல கார், பைக் வாங்கியோர் கவனத்திற்கு!

image

தேனி மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்றுவதற்கு இங்கு <>க்ளிக் செய்து<<>> ‘தமிழ்நாடு Hypothecation Termination’ தேர்ந்தெடுங்க. பின்னர் வாகன எண், சேசிஸ் கடைசி 5 எண்கள், Form 35,வங்கி NOC பதிவு பண்ணுங்க. அதனை சரிபார்த்த பின் புதிய RC கிடைக்கும். இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News January 16, 2026

தேனியில் இளைஞர் கைது..!

image

தேனி அருகே தேவாரம் காவல் நிலைய போலீசார் குற்றத் தடுப்பு சம்பந்தமாக நேற்று (ஜன.15) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது சக்தி முருகன் (20) என்ற இளைஞர் பொது இடத்தில் வைத்து மது அருந்திய நிலையில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு செய்துள்ளார். இதையடுத்து போலீசார் எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. இந்நிலையில் சக்தி முருகன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

News January 16, 2026

தேனியில் இளைஞர் கைது..!

image

தேனி அருகே தேவாரம் காவல் நிலைய போலீசார் குற்றத் தடுப்பு சம்பந்தமாக நேற்று (ஜன.15) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது சக்தி முருகன் (20) என்ற இளைஞர் பொது இடத்தில் வைத்து மது அருந்திய நிலையில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு செய்துள்ளார். இதையடுத்து போலீசார் எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. இந்நிலையில் சக்தி முருகன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

News January 16, 2026

தேனி: இனி WhatsApp மூலமாக பான் கார்டு..

image

தேனி மக்களே, வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முதலில் உங்களது WhatsApp-ல் இருந்து ‘90131 51515’ என்ற எண்ணுக்கு ‘HI’ என மெசேஜ் அனுப்ப வேண்டும். பிறகு ஆதார் எண்ணை பதிவு பதிவிட்டு, PAN Card என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும், உங்க பான்கார்டு Whatsapp-ல் அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 16, 2026

தேனி: கார் மோதி பெண் பரிதாப பலி..!

image

தேனி அருகே வடபுதுப்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி லலிதாரஸ் (37). இருவரும் தங்களது இரு சக்கர வாகனத்தில் தேனி-போடி ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தோப்புபட்டி அருகே சென்ற போது பின்னால் வந்த கார் டூவீலர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த லலிதாரஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

News January 16, 2026

தேனி: வயிற்று வலியால் எடுத்த விபரீத முடிவு…

image

போடி அருகே சில்லமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன் (48). 6 மாதங்களுக்கு முன் குடல் இறக்கம் ஏற்பட்டு ஆபரேஷன் செய்துள்ளார். அதைத்தொடர்ந்து இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. அதற்கு சிகிச்சை எடுத்தும் பலனளிக்காமல் இருந்து வந்துள்ளது. இதனால் மன வேதனையில் இருந்து வந்த மோகன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News January 16, 2026

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 15.01.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News January 15, 2026

தேனி: இலவச GAS அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

தேனி மாவட்ட மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக்<<>> செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!