India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டம் கம்பம் சுற்று வட்டார பகுதியில் கோடை வெயில் வாட்டி வதைத்த வேளையில் இரண்டு நாட்களாக மழை பெய்து வந்தது. முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 152 அடி. தற்போது நீர்மட்டம் 115 அடியாக உள்ளது. அணைக்கு நீர் இருப்பு 1727 மில்லியன் கன அடியாக இருந்தது. குடிநீர் தேவைக்காக இரைச்சல் பாலம் வழியாக வினாடிக்கு 100 கன அடியாக திறந்து விடப்படுகிறது.
தேவாரம் ரோட்டுபட்டியைச் சேர்ந்த ஜேக்ஸ் என்பவரது மனைவியிடம் லோகன் பிரபு அலைபேசியில் தொடர்ந்து பேசி உள்ளார். இதனால், கோபமடைந்த ஜேக்ஸ், நேற்று (மே.6) தனது உறவினர்கள் அபினாஷ், சிவா ஆகியோருடன் சேர்ந்து லோகன் பிரபு வீட்டில் இருந்த வாஷிங் மெஷின், பிக்கப் வண்டி கண்ணாடியை அடித்து உடைத்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரில் மூவர் மீது தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்தியன் அமைச்சூர் கிக் பாக்ஸிங் அசோசியேசன் நடத்திய மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு விளையாட்டு பல்கலை., உள்ளரங்கத்தில் மே 3,4, 5 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. இதில், போடி, தேனி காம்பாக்ட் கிளப் மாணவ மாணவிகள் 2 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை பெற்றன.ர் தங்கம் வென்ற வீரர்கள் ஜூன் மாதம் கல்கத்தா சிலிகுறிச்சியில் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்குகளில் நிலவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தேனி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் வீரபாண்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கெளமாரியம்மன் கோவில் உற்சவ திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை நேற்று நடைபெற்றது. பூஜைக்கு பின்னர் சுவாமி வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.
இன்டர்நேஷனல் ஓபன் சிலம்பம் செம்பியன் 2024 போட்டிகளில் சின்னமனூர் வீரமங்கை வேலுநாச்சியார் சிலம்பம் கலைக்கூடம் மாணவர்கள் ஸ்ரீலங்காவில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றனர். இந்நிலையில், தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த சின்னமனூர் வீராங்கனைகளுக்கு ஆசான் ஈஸ்வரன் உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் இன்று (மே.06) இரவு 7 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் கடந்து சில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டத்தில் ஆங்காங்கு நேற்று (மே.05) மழைப்பெய்தது. அதன் மழைப்பொழிவு விவரத்தை சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ளது. அதன் படி, ஆண்டிப்பட்டி பகுதியில் 4 சென்டி மீட்டரும், தேக்கடியில் 2 சென்டி மீட்டரும், பெரியார், சண்முகநதி, கூடலூர் பகுதிகளில் 1 சென்டி மீட்டரும் பதிவானது. நாளை தமிழகத்தில் ஆங்காங்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோடாங்கிபட்டியில் ஶ்ரீபாலாஜி என்பவரது பண்ணை வீட்டில் கடந்த 1 ஆம் தேதி ரூ.5.18 லட்சம் மதிப்புள்ள பித்தளை சிலைகள் மற்றும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் திருடு போனது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் திருட்டில் ஈடுபட்ட ரமேஷ், சங்கர், அருள்பாண்டி , சிலம்பரசன், ஆனந்த், ஜெகதீசன் ஆகியோரை நேற்று (மே.5) கைது செய்துள்ளனர்.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், தேனி மாவட்டத்தில் 94.65% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் 93.18% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் 96.00% தேர்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.