India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் கடந்த ஏப்.26 முதல் ஜூன்.13 வரை கோயில் வளாகங்களில் நிரந்தரமாக 12 இடங்களில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களின் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய ரூ. 34 லட்சத்து 77 ஆயிரத்து 788, 144 கிராம் தங்கத்திலான காணிக்கை பொருட்கள், 470 கிராம் வெள்ளியிலான பொருட்கள் கணிக்கையாக கிடைத்துள்ளது.
ஆண்டிபட்டி போலீசார் ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (ஜீன்15) தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணியக்காரன்பட்டி பகுதியில் உள்ள ரேஷன் கடை பின்புறம் பணம் வைத்து சூதாடிய அந்தோணி ராஜ், பிச்சமுத்து, ஜான் செல்லத்துரை, பெரிய அன்னமுத்து என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.600 பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவதானப்பட்டியை சேர்ந்தவர் கவியரசன். இவர் நேற்று தனது நண்பர் டிராவிட் என்பவருடன் காரில் பெரியகுளம் நோக்கி வந்து கொண்டிருந்தார். பழைய ஆர்டிஓ ஆபீஸ் அருகே வந்த போது நிலை தடுமாறிய கார் பள்ளத்தில் உருண்டது. காரில் வந்த இருவரும் படுகாயமடைந்த நிலையில், தேனி மருத்துவக் கல்லூரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
க.மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம், பாலூத்து ஊராட்சியில் அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில்
அமைக்கப்பட்டிருந்த சிறு புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்புத்துறை பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
தேனி மாவட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தாலுகா அலுவலகங்கள், ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் உரிய சான்றுடன் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்பிக்கலாம். முகவரி, மாற்றத்திற்கு படிவம் 8-ஐ உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம், ஆன்லைனில் eci.gov.in என்ற இணைய முகவரியிலும் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தேனி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற எம்.பி., தங்கதமிழ்ச்செல்வன் நேற்று (ஜூன்.13) தேனியில் உள்ள பங்களாமேடு, பாரஸ்ட் ரோடு, சமதர்மபுரம் , அல்லிநகரம், பொம்மையக்கவுண்டன்பட்டி பகுதிகளில் பொது மக்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார். அதில், “மக்களவையில் நான் உங்களின் குரலாக திண்டுக்கல் – சபரிமலை ரயில்பாதை கொண்டு வரவும், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி மதுரை பைபாஸ் ரோடு அமைக்கவும் குரல் கொடுப்பேன்” என்றார்.
தேனி, பழனிசெட்டிபட்டி போலீசார் கடந்த 2 நாட்களாக வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் உரிய ஆவணங்கள் இல்லாத 15 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்த 15 ஆட்டோக்களையும் நேற்று (ஜூன்.13) போலீசார் தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர். தேனி வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பறிமுதல் ஆட்டோக்களின் ஆவணங்களை ஆய்வு செய்து, ஆன்லைன் அபராதம் விதிக்கும் நடைமுறைகளுக்கு ஒப்புதல் அளித்தார்.
சில்வார்பட்டியைச் சேர்ந்தவர் காமாட்சி. மேல்மங்கலத்தைச் சேர்ந்த செல்லமுத்து என்பவர் 12ம் தேதி இரவில் காமாட்சியின் வீட்டின் முன் நின்று, ஆபாசமாக பேசியதை கண்டித்த காமாட்சியின் மனைவியை தாக்கியதால் அதை தடுக்க முயன்றார். அப்போது காமாட்சியை அடித்து உதைத்த செல்லமுத்து அவரின் வலது கை நடுவிரலை கடித்து குதறினார் . ரத்தம் வழிந்த நிலையில் அவர் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தேனி அல்லிநகரம் நகராட்சியில் தனியாா் நிறுவனம் மூலம், ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளா்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில் நேற்று (ஜூன்.13) தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன் 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவர்கள் தங்களுக்கு காலதாமதமின்றி மாத ஊதியம், பணப் பலன்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.
தேனி மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டு துவக்கம் முதல் தற்போது வரை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இதுவரை 1371 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து 22 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளதாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தெரிவித்துள்ளார். மேலும் 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 180 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.