India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்டத்தில் இன்று 14.02.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

சின்னமனூர் நெடுஞ்சாலையில், துர்க்கை அம்மன் கோயில் அருகே தேனி – கம்பம் நகர் நோக்கி வந்த அரசு பஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் புகுந்து விபத்திற்குள்ளானது. விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு சிறு காயங்கள் மட்டும் ஏற்பட்டது. விபத்து குறித்து சின்னமனூர் போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில், வரும் 17ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை மின் நுகர்வோர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே தேனி, போடி, ராசிங்காபுரம் உட்கோட்டங்களை சேர்ந்த மின்நுகர்வோர்கள் தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என தேனி மின்பகிர்மான செயற்பொறியாளர் சண்முகா தெரிவித்துள்ளார்.

தேனி மக்களே உங்க போனுக்கு தேவை இல்லாத லோன், கிரெடிட் கார்டு வேண்டுமா, இடம் விற்பனைன்னு போன் வருதா? இதை மத்திய அரசின் TRAI DND 3.0 (Do Not Disturb) என்ற செயலியின் மூலம் தடுக்கலாம். இங்கு <

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <

பெரியகுளத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் நிரஞ்சனாதேவியை (30) மதுரையை சேர்ந்த சிவபாலன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். சிவபாலன், மனைவியின் நகைகளை விற்று செலவு செய்ததுடன் குடும்பத்தாருடன் சேர்ந்து மனைவியை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையடைந்த நிரஞ்சனாதேவி தந்தை வீட்டிற்கு வந்த நிலையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு.

தேனி மக்களே..நீங்கள் பயன்படுத்திய மொத்த மின்சாரத்தின் பயன்பாடு, அரசின் மானியம் குறித்து தெரிஞ்சிக்கனுமா? இனி கவலை வேண்டாம். மின் சேவைகளை எளிமைப்படுத்த மின்வாரியம் TNEB என்ற APP-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இங்கு <

தேனி மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் <

தேனி மாவட்டம், ஆசாரிபட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி 12.ம் வகுப்பு படித்து வந்தார். இவர் 11.ம் வகுப்பை விட தற்போது கணித பாடப்பிரிவில் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளார். இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த மாணவி சில தினங்களுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

போடி, சிலமலையில் மருந்துக் கடை நடத்தி வருபவர் சுனில் (52). இவர் நேற்று முன் தினம் அவரது காரில் கேரளா சென்று விட்டு ஊர் திரும்பியுள்ளார். அப்போது, லோயர்கேம்ப் பகுதியில் சபரிமலைக்கு சென்ற வேன் இவரது காா் மீது மோதியது. இந்த விபத்தில் சுனில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா். மேலும், வேனில் பயணித்த 4 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து குமுளி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை.
Sorry, no posts matched your criteria.