Theni

News February 12, 2026

தேனி: பைக் மீது கார் மோதியதில் ஒருவர் படுகாயம்

image

கொடைக்கானலை சேர்ந்த ஆண்டோ கிளாட்வின் (34) என்பவர் நேற்று முன் தினம் அவரது பைக்கில் தேனி வந்துவிட்டு மீண்டும் கொடைக்கானல் திரும்பி உள்ளார். அடுக்கம் சாலை வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்த பொழுது எதிர்திசையில் வந்த கார் பைக் மீது மோதியது. இதில் ஆண்டோ கிளாட்வின் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து பெரியகுளம் போலீசார் வழக்கு (பிப்.11) பதிவு செய்து விசாரணை.

News February 12, 2026

தேனி: தங்கை உறவுள்ள சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்

image

தேனி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன்(30). இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இவர் 17 வயது தங்கை உறவு முறை கொண்ட சிறுமியை சில மாதங்களுக்கு முன் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் சிறுமி தற்போது 3 மாத கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்த புகாரில் தேனி மகளிர் போலீசார் தமிழரசன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை.

News February 12, 2026

தேனி: ரூ.5 லட்சம் வட்டி கிடைக்கும் சேமிப்பு திட்டம்

image

தேனி தபால் நிலையத்தில் RD கணக்கில் தினமும் ரூ.333 சேமித்தால், 5 ஆண்டுகளில் சுமார் ரூ.6 லட்சம் முதலீடு உடன் ரூ.7,13,659 கிடைக்கும். 10 ஆண்டுகள் தொடர்ந்தால் ரூ.12 லட்சம் முதலீடு ரூ.17,08,546 ஆக உயரும். 6.70% வட்டி மட்டும் ரூ.5 லட்சத்திற்கும் மேல் கிடைக்கும். வீடு, வாகனம், குழந்தைகளின் கல்வி போன்ற எதிர்கால தேவைகளுக்கு இது நல்ல சேமிப்பு திட்டம். *ஷேர் செய்யுங்கள்.

News February 12, 2026

தேனி: இவிஎம் செயல் விளக்க மையம் – ஆட்சியர் அறிவிப்பு

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பெரியகுளம் சார் ஆட்சியர் அலுவலகம் மற்றும் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகங்களில் மாதிரி செயல் விளக்க மையங்கள் (EVM Demonstration Center) அமைக்கப்பட்டுள்ளன.‌ பொதுமக்கள் இந்த மையங்களில் மாதிரி சின்னங்களைப் பயன்படுத்தி வாக்களித்து, தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

News February 12, 2026

தேனி மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் கவனத்திற்கு!

image

தேனி மாவட்ட கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்தவர்களின் குழந்தைகளுக்கு இணையவழி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் ஏ.ஐ., தொழில்நுட்பம், டிஜிட்டல் மார்க்கெட்டிங், வெப் டெவலப்மெண்ட், ரோபோடிக் ஆட்டோமேஷன் உள்ளிட்ட 40 பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை நேரில் அல்லது 8001858687 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News February 12, 2026

தேனி மாவட்டத்தில் 3000 பேருக்கு குடும்ப கட்டுப்பாடு

image

தேனி மாவட்டத்தில் கடந்த 2025ல் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 3082 பேர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ளது. இதில் 5 ஆண்களுக்கு வாசக்டமி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2024 -2025 ல், 21 ஆண்கள், 4299 பெண்கள் என மொத்தம் 4320 பேர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆப்பரேஷன்கள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 12, 2026

10.ம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்.23ம் தேதி துவக்கம்

image

தேனி மாவட்டத்தில் அரசு, தனியார், உதவி பெறும், மெட்ரிக் என மொத்தம் 66 உயர்நிலைபள்ளிகள், 156 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் பத்தாம் வகுப்பில் 144 பள்ளிகளில் 14,103 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே செய்முறைத்தேர்வுகள் நடக்க உள்ளன. செய்முறைத்தேர்வுகள் பிப்.23.ல் துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 12, 2026

தேனி: கடனை திருப்பி செலுத்தியும் கொலை மிரட்டல்

image

போடி அருகே தருமத்துப்பட்டி பகுதியை சேர்ந்த திவ்யபாரதி (25)யின் பெற்றோர், சில்லமரத்துப்பட்டியை சேர்ந்த மகாலட்சுமியிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கி பின்னர் திருப்பிச் செலுத்தியதாக கூறப்படுகிறது. அதன்பிறகும் மேலும் பணம் கேட்டு மகாலட்சுமி, அவரது மகள் வினோ, தர்மராஜ், சுருளியாண்டி ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் போடி தாலுகா போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

News February 12, 2026

தேனி: கட்டுமான பயிற்சி பெற ஆட்சியர் அழைப்பு

image

தேனி மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்தவர்களின் குழந்தைகளுக்கு இணையவழி பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் சேர, உரிய சான்றிதழ்களுடன் வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 80018 58687 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித்சிங் தெரிவித்துள்ளார்.

News February 12, 2026

தேனி: கட்டுமான பயிற்சி பெற ஆட்சியர் அழைப்பு

image

தேனி மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்தவர்களின் குழந்தைகளுக்கு இணையவழி பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் சேர, உரிய சான்றிதழ்களுடன் வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 80018 58687 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித்சிங் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!