India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரசு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், பாடத்திட்டங்கள் மற்றும் அது குறித்த சந்தேகங்களுக்கு இனி எங்கும் தேடி அலைய தேவையில்லை. TNPSC, TNUSRB, TRB மற்றும் RRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டங்களை, மென் பாடக்குறிப்புகளாக அரசு இணையத்தில் பதிவேற்றியுள்ளது. இனி பாடத்திட்டங்களை இந்த லிங்கை <

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க.

குமுளி, லோயர் கேம்பில் காவல் உதவி ஆய்வாளர் சூர்யதிலகராணி தலைமையில் வாகன தணிக்கை நடைபெற்றது. மதுரையிலிருந்து கேரளத்துக்கு சென்ற காரை சோதனையிட்டதில் 35 கிலோ கஞ்சா கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் மதுரை முனிச்சாலை காமராஜபுரத்தைச் சேர்ந்த செல்வி (47), முனியசாமி (36), பாலசுப்பிரமணி (38) கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 35 கிலோ கஞ்சா மற்றும் ரூ.1.18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆண்டிபட்டியை அடுத்த சக்கம்பட்டியைச் சேர்ந்த நாராயணசாமி (42) வீட்டருகே உணவகம் நடத்தி வந்தார். சனிக்கிழமை வீட்டில் மின் சுவிட்சை போட்டபோது மின் கசிவு ஏற்பட்டு உடலில் மின்சாரம் பாய்ந்தது. பலத்த காயமடைந்த அவரை ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சம்பவம் குறித்து ஆண்டிபட்டி காவல் நிலையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் இன்று 15.02.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

தேனி மாவட்டம், வடபுதுப்பட்டியில் இன்று வேகமாக வந்த டிராக்டர் மோதியதில் மதுராபுரியைச் சேர்ந்த இளைஞர் பிரபாகரன் (26) தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிராக்டரை ஓட்டி வந்த நபர் யார்? என தெரியவில்லை. மேலும், அவர் தப்பி ஓடியதால் விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் உட்கோட்டம் குமுளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனை செய்தனர். அப்போது சட்ட விரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 3 நபர்களை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அந்த நபர்களிடமிருந்து மொத்தம் 34.950 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <

தேனி மக்களே (Bharatgas, HP, Indane) கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும்.
Bharatgas: 77150 12345
HP: 94936 02222
Indane:84549 55555
இந்த எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா… கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!
Sorry, no posts matched your criteria.