India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி அருகே பழனிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்த தாமோதரன் என்பவரை அடித்து கொலை செய்த வழக்கில் பழனிசெட்டிபட்டி போலீசார் 2 சிறுவர்கள் உட்பட 7 பேரை கடந்த சில நாட்களுக்கு முன்பாக கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய அருண்குமார், மாயக்கண்ணன் ஆகிய இருவரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர்கள் இருவரும் நேற்று (டிச.7) தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை மலையில் உள்ள மகா தீபம் ஏற்படும். இதனையொட்டி தேனி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து திருவண்ணாமலைக்கு டிச.,12 மதியம் முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்கள் திண்டுக்கல், திருச்சி, திருக்கோவிலுார் வழியாக திருவண்ணாமலை செல்லும். பக்தர்களின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படும் என போக்குவரத்துத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

தேனி மாவட்டத்தில் இன்று 07.12.2024 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறையினர் வெளியிட்டுள்ளன. இதில் உதவு தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

கொடி நாள் அனைத்து பகுதிகளிலும் இன்று நினைவு கூறபடுகிறது. நாட்டின் விடுதலையை பாதுகாத்து போரில் தன் இன்னுயிரை நீத்து அண்டை நாடுகளின் படையெடுப்பை முறியடிக்கும் முயற்சியில் உயிர் தியாகம் உடலுறுப்பு இழந்தும் உன்னத பணியாற்றிய முன்னாள் முப்படை தியாகிகளுக்கும் தற்போதைய வீரர்களுக்கும் கொடி தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என தேனி முன்னாள் எம்.பி ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் சீர் மரபினர் நல வாரியத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான உறுப்பினர் சேர்க்கை, நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு விண்ணப்பங்கள் வருகின்ற டிச.13 அன்று போடிநாயக்கனூர் பாலார்பட்டியிலும், டிச.20 அன்று பெரியகுளம் எ.புதுப்பட்டியிலும், டிச.27 அன்று மயிலாடும்பாறை பிடிஓ அலுவலகத்திலும் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்

சின்னமனூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து கரிச்சிப்பட்டி செல்லும் சாலையில் கருப்பசாமி என்பவள் தோட்டத்தில் அவருடைய வளர்ப்பு நாய் 80 அடி கிணற்றில் விழுந்தது. இது குறித்து அவர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் தீயணைப்பு துறையினர் கிணற்றில் விழுந்த நாயை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி உள்ள பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தேனியில் உள்ள உழவர் பயிற்சி மையத்தில் டிச.10 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை லாபகரமாக வெள்ளாடு வளர்ப்பு குறித்த சான்றிதழுடன் கூடிய ஒரு நாள் கட்டணப் பயிற்சி நடைபெறவுள்ளது. இதற்காக பயிற்சி கட்டணம் 500 நிர்னைக்கபட்டுள்ளது. பயிற்சியில் பங்கேற்க விரும்பும் சுயதொழில் முனைவோர், விவசாயிகள் 98650 16174 என்ற எண்ணில் முன்பதிவு செய்து பயன் பெறலாம் என பயிற்சி மைய தலைவர் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் இன்று (06.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி தேனி-அல்லிநகரம் நகராட்சியில் இன்று டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பல்வேறு துறைகளின் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா மற்றும் அமைச்சர் ஆகியோர் தூய்மை பணியாளர்களுடன் சமபந்தி போஜனம் உணவருந்தினர்.

தேனி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில்முனைவோர் 05.12.2024 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பொதுமக்கள் நலன் கருதி 10.12.2024 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.