Theni

News February 7, 2025

தேனி ஆட்சியர் அறிவிப்பு 

image

தமிழக அரசு வீடு தோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகின்றனர். இதில் தேனி மாவட்டத்தில் வீட்டில் நூலகம் அமைத்து வாசிப்பினை மேம்படுத்தி வரும் தீவிர வாசகர்கள், சொந்த நூலகங்களுக்கான விருது பெற விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். பிப்ரவரி இருபதாம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தகவல்

News February 7, 2025

தென்னைமரத் தொழிலாளிக்கு இன்சூரன்ஸ்

image

தென்னை மரம் ஏறுவோர்,தண்ணீர் பாய்ச்சுவோர்,கலப்பினம் செய்யும் தொழிலாளர்களுக்கு ரூ.239 க்கு புதிதாக இன்சூரன்ஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கம்பம் தோட்டக்கலை உதவி இயக்குநர் பாண்டியன் ராணா  தெரிவித்துள்ளார். இதில் 18 முதல் 65 வயதுடைய தொழிலாளர்கள் பதிவு செய்யலாம். காப்பீட்டு தொகை ரூ.7 லட்சமாகும். இறப்பு, ஊனமடைதல், மருத்துவமனை செலவுகள், மீட்பு நாட்களில் தற்காலிக வருமான உதவி ஆகியவை கிடைக்கும்.

News February 7, 2025

ஏலக்காய் பயிருக்கு காப்பீட்டு திட்டம்

image

இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் மூலம் ஏலக்காய் பயிருக்கு காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஏக்கருக்கு ரூ.1,000 கட்டணமாக செலுத்த வேண்டும். தாலுகா அளவில் மழை, வெப்பநிலை பொறுத்து ஏதேனும் மாற்றம் இருப்பின் இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு ரூ.20,000 வழங்கப்படும். விரும்பும் விவசாயிகள் போடி தோட்டக்கலை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரவித்துள்ளார்.

News February 7, 2025

தேனி GH-ல் 5 மாதமாக தாய்-சேய் இறப்பு இல்லை!

image

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கான, பிரசவித்த தாய்மார்களுக்கான மேம்படுத்தப்பட்ட சிகிச்சை மூலம் கடந்த 5 மாதங்களில் சிசுக்கள் இறப்பு இன்றி மகப்பேறு மருத்துவத்துறை சாதனை படைத்துள்ளது. 2024 செப்டம்பர் 1 முதல் ஜனவரி 31 வரையிலான 5 மாதங்களில் 1324 ஆண் குழந்தைகளும், 1302 பெண் குழந்தைகள் என 2626 குழந்தைகள் ஆரோக்கியதுடன் பிறந்துள்ளதாகவும் மருத்துவர் நந்தினி தெரிவித்துள்ளார்.

News February 7, 2025

வைகை அணையில் நீர் திறப்பு நிறுத்தம்!

image

வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக டிச.18 முதல் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. முறைப்பாசனம் நடைமுறையில் இருப்பதால் அணையில் திறக்கப்பட்ட நீர் நேற்று(பிப்.6) முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்ட நீர் 5 நாட்களுக்குப் பின் மீண்டும் திறக்கப்படும் என நீர்வளத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

News February 7, 2025

தேனி: கொத்தடிமை முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு – கலெக்டர்

image

தேனி பழைய பேருந்து நிலையத்தில் இன்று(07.02.2025) காலை 09.30 மணியளவில் கொத்தடிமை முறை ஒழிப்பு தின உறுதிமொழி மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொள்ள உள்ளனர். அதனை தொடர்ந்து, கொத்தடிமை முறை விழிப்புணர்வு குறித்த கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட உள்ளது எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா நேற்று தெரிவித்துள்ளார்.

News February 6, 2025

தேசிய நெடுஞ்சாலை துறை அறிவிப்பு

image

தேனியில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் பாலம் கட்டுவதற்கான கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால்
போடி, மூணார், உத்தமபாளையம்
கம்பம், குமுளி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பொது மக்கள் தேனி புதிய பேருந்து நிலையம் சென்று அங்கு இருந்து பயணிக்கும்படி தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 6, 2025

1.37 கோடி மோசடி வழக்கில் இடைத்தரகர் கைது

image

தேனி மாவட்டத்தில், 21 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 1.37 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மகாலட்சுமி, பாலமுருகன், நாகேந்திரகுமார் ஆகியோரை கடந்த நவம்பரில் கைது செய்தனர். விசாரணையில் கண்ணன் என்பவர் இவர்களுக்கு இடைத்தரகராக செயல்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கண்ணனை நேற்று (பிப்.5) கைது செய்தனர்.

News February 6, 2025

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

image

தேனி மாவட்டத்தில் அரசு, உதவி பெறும் கல்லுாரிகளில் மூன்றாமாண்டு இளநிலை படிப்பு, பாலிடெக்னிக்கின் முதுநிலை, அரசு ஒதுக்கீட்டில் தொழில்நுட்ப படிப்பு படிக்கும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு http://umis.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பிப்.,28 க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.SHARE செய்யவும்.

News February 5, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 05.02.2025 இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!