Theni

News October 26, 2024

ஆதி திராவிடர் நலக் குழு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

image

தேனி மாவட்டத்தில் 2024ஆம் ஆண்டு முதல் 2027ஆம் ஆண்டு வரையிலான ஆதி திராவிடர் நலக்குழு, விழிப்பு, கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட உள்ளது. இந்தக் குழுக்களில் உள்ள பதவிகளுக்கு தகுதியுள்ளவர்கள் வருகிற நவ.10ம் தேதி மாலை 5 மணிக்குள் தேனி மாவட்ட ஆதி திராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரிலும், தபால் மூலமும் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

News October 25, 2024

தேனி மாவட்டத்திற்கு நாளை கனமழை

image

தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் நாளை (அக்.26) கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News October 25, 2024

தேனி: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (அக்.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News October 25, 2024

தேனியில் நாளை அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை

image

கனமழை காரணமாக தேனியில் நாளை அனைத்து வகையான பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே அரசுப் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News October 25, 2024

சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை 

image

வருசநாடு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு 14 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் பாலமுருகனை கைது செய்தனர். மேலும் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இன்று (அக்.25) பாலமுருகனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

News October 25, 2024

தேனி: கால்நடை தீவனப்பயிர் வளர்ப்பு – விண்ணப்பிக்க அழைப்பு

image

தேனி மாவட்டம் கால்நடை தீவனப் பயிர் வளர்ப்பு மற்றும் புல் நறுக்கும் கருவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா இன்று (அக்.25) தெரிவித்துள்ளார். தங்கள் வளர்க்கும் கால்நடைகளின் விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை மருத்துவ நிலையத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 25, 2024

ஓய்வூதியர்களுக்கு வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்

image

ஓய்வூதியர்களுக்கு வீடு தேடி வந்து டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் வழங்கும் திட்டத்தில் பயன்பெறலாம். இச்சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் https://ccc.cept.gov.in/servicerequest/request.aspx என்ற இணைய முகவரி மூலமும், Postinfo செயலியை பதிவிறக்கம் செய்தும் கோரிக்கையை பதிவு செய்யலாம் என தேனி கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News October 25, 2024

தேனி மாவட்டத்தில் 32 வீடுகள் மழையால் சேதம்

image

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக இம்மாத தொடக்கத்தில் இருந்து நேற்று(அக்.24) வரை மாவட்டத்தில் மொத்தம் 32 வீடுகள் சேதமடைந்துள்ளன. பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு அரசு பேரிடர் நிதியில் இருந்து தலா ரூ.4 ஆயிரம் வீதம் 19 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 25, 2024

தேனி,கம்பம்,போடி நகராட்சிகள் ஹைடெக் நகரங்களாக வாய்ப்பு

image

தேனி, கம்பம், போடி நகராட்சிகள் உள்பட 12 நகராட்சிகள் அரசு ஹைடெக் நகராட்சிகளாக மதிப்பிடப்பட்டுள்ளன. இந்த 3 நகராட்சிகள் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் நகர அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. இதற்காக இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு நகராட்சிக்கும் பல நூறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு அடிப்படைக்கான வசதிகள் நடைபெறும்.

News October 25, 2024

தேனி: பைக்கில் இருந்த 4 அடி நீள பாம்பு

image

தேனியில் இருந்து பங்களா மேடு செல்லும் சாலையில் உள்ள ஒரு நகைக்கடை அருகே நிறுத்தப்பட்டு இருந்த ஸ்கூட்டர் பைக்கில் 4 அடி நீளம் உள்ள கட்டுவிரியன் பாம்பு பதுங்கி இருந்ததை , தேனி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் 4 பேர் கொண்ட குழு பாம்பை பத்திரமாக பிடித்து, அருகே உள்ள வனப்பகுதியில் விட்டனர். பைக்கிற்குள் பாம்பு இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

error: Content is protected !!