India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கும்பகோணம் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அரசினர் கலைக்கல்லூரியில் இன்று (மார்ச்.08) கல்லூரி விடுமுறை என கல்லூரி நாட்காட்டியில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அதனை ரத்து செய்து நாளை வேலை நாள், மேலும் நான்காம் நாள் கால அட்டவணை கடைபிடிக்கப்படும் என கல்லூரி முதல்வர் மாதவி சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் தொகுதி, உடையாளூர் ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஊரகப்பகுதியில் “மக்களுடன் முதல்வர்” திட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாநிலங்களவை உறுப்பினர் சு. கல்யாணசுந்தரம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் மயிலாடுதுறை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ. இராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் கரிகால சோழ கலையரங்கத்தில் சனிக்கிழமை (08.03.2025) காலை 10.45 மணி அளவில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்கள்.
திருவையாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி நர்சிங் முடித்து வீட்டில் உள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு பூதலூர் பகுதியை சேர்ந்த மதியழகன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி மருத்துவமனையில் ஆண் குழந்தை பெற்றெடுத்த நிலையில் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று கர்ப்பத்திற்கு காரணமாக இருந்த முன்னாள் காதலனும் திருமணம் ஆனவருமான மதியழகனை அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், இதில் தொழில்முனைவோருக்கான ஒருநாள் “ChatGPT”பயிற்சி வகுப்பு நாளை (மார்ச்.08) திருச்சி, அரியமங்கலம் சேஷசாயி தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற உள்ளது. இதில் ஸ்டார்ப் நிறுவனர்கள், தொழிமுனைவோர் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு www.editn.in என்ற இணையம், 9894920819/ 9080609808 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். SHARE NOW.
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே அய்யன்பேட்டையில் ஸ்ரீ படி அளந்தநாயகி சமேத செட்டியப்பர் கோயில் உள்ளது. சிவபெருமான் தராசு பிடித்தும், பார்வதி தேவி அளவை படியை ஏந்தியும் வியாபாரம் செய்யும் கோலத்தில் காட்சியளிக்கும் இந்த கோயிலுக்கு வியாபாரிகள் ஒரு முறை சென்று தரிசித்தால் தங்களது வியாபாரம் பெருகும், நஷ்டம் தீரும் கடன்கள் அடையும் என்பது ஐதீகம்.. வியாபார நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்
MBBS, BDS படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயம். ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது. இந்தாண்டு மே 4ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கியது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நாளை இரவு 11.50 மணியுடன் முடிவடைகிறது. எனவே விண்ணப்பிக்காத மாணவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 மூலம் MTS, Lab Technician, Pharmacist என மொத்தமாக 35 காலியிடங்கள் உள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு மார்ச். 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்களுக்கு ரூ. 13,000 முதல் ரூ. 40,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து கூடுதல் தகவல் அறிய <
தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு புதன்கிழமை தொடங்கியது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 229 பள்ளிகளைச் சேர்ந்த 14 ஆயிரத்து 105 மாணவர்களும், 12 ஆயிரத்து 764 மாணவிகளும் என மொத்தம் 26 ஆயிரத்து 869 பேர் விண்ணப்பம் செய்தனர். தமிழ்த் தேர்வில் 26 ஆயிரத்து 210 மாணவ, மாணவிகள் பங்கேற்று எழுதினர். 659 பேர் தேர்வு எழுதவில்லை.
தஞ்சை மாவட்டம், வெண்டயம்பட்டியில் முறிந்து விழும் நிலையில் இருந்த மின்கம்பம் குறித்து பல புகார் மனுக்கள் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சில நாட்களுக்கு முன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக சேதமடைந்த மின்கம்பத்தினை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தினை அங்கு மின்வாரியத்தினர் நிறுவியுள்ளனர். இதுபோல உங்கள் பகுதி மக்கள் கோரிக்கைகளும் நிறைவேற Way2News-இல் நிருபராக இணையவும்!
Sorry, no posts matched your criteria.