Thanjavur

News February 24, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.23) இரவு 10 முதல் இன்று (பிப்.24) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News February 23, 2026

தஞ்சாவூர் : ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தஞ்சாவூர் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு விமான முன்பதிவு ஆளுமை (airlines reservation, excutive) மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் தகுந்த ஆவணங்களுடன் www.tahdco.com என்ற‌ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்

News February 23, 2026

தஞ்சாவூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் இன்று (பிப்.23) பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு, மக்களிடமிருந்து மனுக்கள் பெற்றுக் கொண்டு விரைவான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர்.

News February 23, 2026

தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் 980 மனுக்கள் வழங்கல்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டா, கல்வி கடன், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட 980 புகார் மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

News February 23, 2026

தஞ்சை: உங்களுக்கு 2026-ல் ஓட்டு இருக்கா? CLICK HERE.!

image

தஞ்சை மக்களே.., இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா?.<> இங்கு க்ளிக்<<>> செய்து ECINET செயலியை பதிவிறக்கம் செய்து, உங்க வாக்களர் அட்டை EPIC எண்ணை பதிவு செய்தால் எந்த பாகம், எந்த வாக்கு சாவடி உள்ளிட்ட அனைத்து தகவலும் வந்துடும். உங்க குடும்ப உறுப்பினர் வாக்கு விவரங்களையும் பாத்துக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உடனே SHARE பண்ணுங்க!

News February 23, 2026

தஞ்சை: CM Cell-ல் புகார் அளிப்பது இவ்வளவு ஈஸியா?

image

1. முதலில்,<> http://cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்!

News February 23, 2026

தஞ்சையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 26ந் தேதி காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 23, 2026

தஞ்சை: அரசு வேலை – கடைசி வாய்ப்பு

image

இந்தியக் கடற்படையில் 260 (SSC) அதிகாரி பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 260
3. சம்பளம்: ரூ.1,25,000
4. கல்வித் தகுதி: B.Sc, B.Com, B.E/B.Tech, MCA, MBA
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 23, 2026

தஞ்சாவூர்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 9.47,278, பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 10,04,012 மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 155 பேர் என மொத்தம் 19,51,445 வாக்காளர்கள் உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News February 23, 2026

தஞ்சாவூர்: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

தஞ்சாவூர் மாவட்ட மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!