Thanjavur

News February 24, 2026

தஞ்சை: டிராக்டர் வாங்க 80% மானியம்!

image

தஞ்சை மக்களே.. SMAM திட்டத்தில் புதிய டிராக்டர், பவர் டில்லர், தென்னை மட்டை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <>இங்கு க்ளிக் <<>>செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம். SHARE பண்ணுங்க!

News February 24, 2026

அறுவடை இயந்திர ஓட்டுநர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கோரிக்கை

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விளைநிலங்களில் அறுவடை செய்த பிறகு சேறும் சகதியுடன் அறுவடை இயந்திரங்களை சாலைகளில் இயக்குவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே அறுவடை இயந்திரங்களை அறுவடைக்கு பிறகு சுத்தம் செய்த பின் சாலைகளில் இயக்குமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News February 24, 2026

தஞ்சை: பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000.. APPLY

image

தஞ்சை மக்களே.. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் அறிய <>இங்கே க்ளிக்<<>> செய்து (அ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News February 24, 2026

தஞ்சை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வேண்டுமா?

image

தஞ்சை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 24, 2026

பேராவூரணி அருகே காருக்குள் இறந்து கிடந்த இளைஞர்

image

பேராவூரணி அருகே குருவிக்கரம்பையைச் சேர்ந்த மிதுன்குமார் என்பவர், கடைவீதியில் நிறுத்தியிருந்த தனது காருக்குள்ளேயே உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். நீண்ட நேரமாக கார் என்ஜின் ஓடிக்கொண்டிருந்ததைக் கவனித்த அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 24, 2026

தஞ்சை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க <>அதிகாரப்பூர்வ இணையதளத்தில்<<>>, Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும், உங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE செய்ங்க.

News February 24, 2026

தஞ்சை: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

தஞ்சை மக்களே, இனி ஆதாரை அப்டேட் செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, “<>mAadhaar<<>>” என்ற ஆதார் மொபைல் APP-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடும் செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News February 24, 2026

தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வருகிற 26-ம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 24, 2026

தஞ்சை மாவட்ட கால்நடைத் துறையில் வேலை!

image

தஞ்சாவூர் மாவட்ட கால்நடைத் துறையில், கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். மேலும் விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் வருகிற 26-ம் தேதி நாஞ்சிக்கோட்டையில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

News February 24, 2026

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.23) இரவு 10 முதல் இன்று (பிப்.24) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!