Thanjavur

News February 22, 2026

தஞ்சை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்… APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<> இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News February 22, 2026

தஞ்சை: இனி சிலிண்டர் புக் பண்ண மிஸ்டு கால்…!

image

தஞ்சை மக்களே (Bharatgas, HP, Indane) கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும்.
Bharatgas: 77150 12345
HP: 94936 02222
Indane:84549 55555
இந்த எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா… கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

News February 22, 2026

தஞ்சை விவசாயிகளுக்கு ரூ.7.96 கோடி வரவு வைப்பு

image

தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை மற்றும் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட 9,833 ஏக்கர் நெற்பயிர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், முதற்கட்டமாக 5295 விவசாயிகளுக்கு ரூ.7.96 கோடி நேரடியாக வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

News February 22, 2026

தஞ்சை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

தஞ்சை மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். இதனை SHARE செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

News February 22, 2026

தஞ்சாவூர்: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

image

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <>இ-பெட்டகம் என்ற <<>>செயலியில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ளே சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th, கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News February 22, 2026

தேர்தல் பணி; முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு!

image

தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் செய்தி குறிப்பி வெளியிட்டுள்ளார். அதல், வருகிற சட்டமன்ற தேர்தல் பாதுகாப்புப் பணியில் காவல்துறையோடு இணைந்து செயல்பட, முன்னாள் படைவீரர்கள் சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்கு முன்னாள் படைவீரர்கள், தங்களது அடையாள அட்டை, மு.படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரிலோ exweltnj@tn.gov.in என்ற முகவரியிலோ பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 22, 2026

தஞ்சாவூர்: Google Pay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

image

தஞ்சாவூர் மக்களே இன்றைய சூழலில் கையில் பணம் வைத்து செலவு செய்வதை விட போன் மூலமாகவே அதிக பண பரிவர்த்தனைகள் நாம் மேற்கொள்கிறோம். இப்படியான நேரத்தில் நீங்களோ அல்லது உங்களது நண்பர்களோ யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE IT!

News February 22, 2026

தஞ்சாவூர்: அரசு பேருந்து மோதி 2 இளைஞர்கள் பலி – சோகம்

image

பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த கோகுல்ராஜ்(24) மற்றும் அவரது நண்பர் வெங்கடேசன்(24) ஆகிய இருவரும் பைக்கில் திருச்செந்தூர் சென்று விட்டு, மீண்டும் ஊர் திரும்பி உள்ளனர். அப்போது அம்மணிசத்திரம் அருகே வந்த போது பைக் மீது அரசு பேருந்து மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவ்விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

News February 22, 2026

தஞ்சாவூர்: 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் போக்சோவில் கைது

image

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே 9ஆம் வகுப்பு மாணவியை, 4 பேர் கொண்ட கும்பல் காரில் வந்து வழிமறித்துள்ளான். அதில் 17 வயது சிறுவன், மாணவியைக் காதலிக்கும்படி மிரட்டி, மாணவியை காரில் ஏற்ற முயன்றுள்ளார். அப்போது அக்கம்பக்கத்தினர் திரண்டதால் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்த புகாரின்படி, 17 வயது சிறுவர்கள் 2 உட்பட பிரகதீஸ்ராஜ், மதன் ஆகிய 4 பேர் கைது போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

News February 22, 2026

தஞ்சை: அரசு பேருந்து மோதி 2 இளைஞர்கள் பலி

image

பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த கோகுல்ராஜ் (24) மற்றும் அவரது நண்பர் வெங்கடேசன்(24) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் திருச்செந்தூர் சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பி உள்ளனர். அப்போது அம்மணிசத்திரம் அருகே வந்து கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவ்விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!