India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்ட நிர்வாகம் நேற்று(ஜன.01)வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், போதைப் பொருட்களுக்கு எதிரான மாபெரும் REELS & SHORTS விழிப்புணர்வு போட்டி நடைபெற உள்ளது. ‘தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு’ தலைப்பில், 30 முதல் 60 வினாடிகளுக்கு வீடியோ இருக்க வேண்டும். ஜன.17ஆம் தேதிக்குள் adadatenkasi@gmail.com என்ற இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT.
தென்காசி மாவட்ட காவல்துறை சார்பாக தென்காசி மாவட்டத்தில் உள்ள நான்கு உட்கோட்டங்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பட்டியலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் குறிப்பிட்ட அலைபேசி மற்றும் தொலைபேசி எண்களின் தகவல்களை தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது சபரிமலை சீசன் காலம் என்பதால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வாகனங்களில் சென்று வருகின்றனர். இன்று புத்தாண்டு என்பதால் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் தங்களது பகுதிகளிலிருந்து சபரிமலைக்கு திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவியில் நீராடிச் செல்வது வழக்கமாக இருந்து வருவதால் குற்றால அருவியில் நிராட ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
ஆரியங்காவு – நெல்லை புதிய வழித்தட பேருந்து தொடக்க விழா நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ,கேரள மாநில திமுக அமைப்பாளர் முருகேசன், முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபன் மற்றும் பலர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
தென்காசி ரயில் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் கற்பக விநாயகம் தலைமையிலான ரயில்வே போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று நபரை பிடித்து விசாரித்தபோது தேவர் குளத்தை சேர்ந்த விஜய்(25) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் ரயில் பயணிகளிடம் நகை செல்போன் பறித்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்ட காவல்துறை, புத்தாண்டை முன்னிட்டு தென்காசி புதிய பேருந்து நிலையத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் தலைமையில் துணைக் காவல் கண்காணிப்பாளர் தமிழ் இனியன் மற்றும் இரவு பணி காவல் துறையினர் மேலும் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் மற்றும் சாலையில் பயணித்த பயணிகள் காவல்துறையினருடன் இணைந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.
தென்காசி மாவட்டம், பொது நூலகத்துறை, மாவட்ட மைய நூலகம், சார்பில் இன்று கன்னியாகுமரி திருவள்ளுவர் திருவுருவச்சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவினை முன்னிட்டு வெள்ளி விழா நடைபெற்றது. விழாவிற்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமை வகித்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
தென்காசி மாவட்ட காவல்துறையின் சார்பாக அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை காவல்துறையின் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு காவல்துறையினர் ஒரு சில அறிவுரைகளையும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், இன்று நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபட உள்ளனர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் என்.ஜி.ஓ.காலனி பகுதியைச் சேர்ந்த டாக்டர். திலீபன் ஜெய்சங்கர் என்பவரை தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக மருத்துவர் அணி மாவட்ட செயலாளராக நியமனம் செய்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதனை அடுத்து மருத்துவரணி மாவட்ட செயலாளருக்கு ஏராளமான அதிமுக-வினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு 2024 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமிழக கேரளா எல்லையான புளியரைப் பகுதியில் கடும் போக்குவரத்து ஏற்பட்டது. இதனை அடுத்து தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று இன்று (டிச.31) மாலை 5 மணி முதல் ஜனவரி 2 ஆம் தேதி காலை 10 மணி வரை லாரிகள் இயக்கப்படாது என இந்திய ஓட்டுநர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
Sorry, no posts matched your criteria.