India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டம் ஆயக்குடி பகுதியில் பால சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.குழந்தை செல்வம் இல்லாதவர்கள் இந்த கோயிலில் மனதார வேண்டினால் அந்த பாலமுருகனே பாலகனாக வந்து பிறப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மூலவர் பாலசுப்பிரமணியர் இடதுபுறம் திரும்பிய மயில் வாகனத்தின் மீது குழந்தை வடிவில் அமர்ந்த கோலத்தில் உள்ளார். இங்கு வைகாசி விசாகம்,தைப்பூசம் மிகவும் சிறப்பாக நடை பெரும். SHARE பண்ணுங்க
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் மெயின் ரோட்டில் உள்ள மீரான் ஸ்பேர்பார்ட்ஸ் அருகில் இன்று மதியம் அவ்வழியே ஆம்னி கார் மற்றும் இரு சக்கரவாகனம் மோதிய விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே அழகப்பபுரத்தில் கமல் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ரீட்டா பகரி (35) என்ற பெண் வேலை பார்த்து வந்துள்ளார் .இந்த நிலையில் நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் சமர்ப்பித்து வந்தனர். இந்நிலையில் தாலுகா அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் <
தென்காசியில் இன்று மார்ச்.8ம் தேதி ரேஷன் கார்டுகள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், திருத்தம், விலாசம் மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். உணவு சப்ளை மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு உதவி ஆணையர் அலுவலகங்களில் இந்த குறை தீர்க்கும் முகாம் நடைபெறும். இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெற்று, பிறருக்கும் *ஷேர் செய்து உதவினால் பயனுள்ளதாக இருக்கும்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி 2025 -2026 ஆம் நிதியாண்டிற்கான தெரு மின் விளக்கு, சுகாதார வளாகம், குடிநீர் சாமான்கள் மற்றும் பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஏலமானது வருகிற 25-ம் தேதி செயல் அலுவலர் அல்லது அவரது அதிகாரம் பெற்றவரால் நடத்தப்படும் விருப்பமுள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என செயல் அலுவலர் கேட்டுக்கொண்டார். *ஷேர்
தென்காசியில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்சனையில், ஊரைவிட்டு ஒரு குடும்பத்தை கிராம தலைவர் ஒதுக்கி வைத்த நிலையில், அவர்களுடன் பழகியதாக 30 பேரும் ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த விவகாரத்தை தேசிய மனித உரிமை ஆணையம் கையில் எடுத்துள்ளது. மேலும், 30 பேரையும் கிராம தலைவர் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தது தொடர்பாக விளக்கம் கேட்டு, தென்காசி மாவட்ட தலைவருக்கு நோட்டீஸும் அனுப்பியிருக்கிறது.
தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நடத்தும் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (08.03.25) நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் 3 மணி வரை ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு 04633- 213179 இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும். மற்றவர்களுக்கும் பகிரவும்.
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மார்ச் 11ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆயவு மையம் கணித்துள்ளது. 10ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. SHARE IT.
தென்காசி ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் TNPSC குரூப்-1 கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வருகிற 12-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. விருப்பமுள்ளவர்கள் 04633 213 179 -ல் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.*TNPSC மாணவர்களுக்கு பகிரவும்*
Sorry, no posts matched your criteria.