Tenkasi

News October 12, 2024

சிலம்பு SUPER FAST ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

image

செங்கோட்டை – சென்னை எழும்பூர் சிலம்பு அதிவிரைவு ரயிலில்(20682) நாளை(அக்.,13) காத்திருப்போர் பட்டியலை குறைக்க கூடுதலாக ஒரு சாதாரண படுக்கை வசதி பெட்டி தற்காலிகமாக இணைக்கப்பட உள்ளது. அதேபோல் பல்வேறு ரயில்களிலும் ஒரு பெட்டி தற்காலிகமாக இணைக்கபடவுள்ளதாக மதுரை தெற்கு ரயில்வே நேற்று(அக்.,11) அறிவித்துள்ளது. SHARE IT.

News October 12, 2024

சிவகங்கையில் இன்று நடைபெறும் பேரணிக்கு அழைப்பு

image

சிவகங்கையில் இன்று (அக்.12) முதல் இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேய ஆயுதக்கிடங்கை அழித்து ஒழித்த வீரத்தாய் குயிலி நினைவு நாளில் தமிழ் புலிகள் கட்சி சார்பில் அருந்ததியர் இட ஒதுக்கீடு பாதுகாப்பு பேரணி நடைபெறுகிறது. இதில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ளுமாறு தமிழ் புலிகள் கட்சி தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கனகராஜ் நேற்று (அக்.11) கேட்டுக்கொண்டார்.

News October 11, 2024

RTI பற்றி விழிப்புணர்வு நடத்த ஆட்சியர் வலியுறுத்தல்

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் இன்று (அக்.11) விடுத்துள்ள அறிக்கையில் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் 12ஆம் தேதி வரை தகவல் அறியும் உரிமைச் சட்ட வார விழா கொண்டாடப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலகங்களிலும் பொது தகவல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் மத்தியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

News October 11, 2024

பிரதமரின் கல்வி தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

தென்காசி மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் சீர் மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவி தொகை திட்டத்தின் மூலம் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட உள்ளது. https://scholarships.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து பயன்படலாம் என ஆட்சியர் இன்று கேட்டுக் கொண்டார்.

News October 11, 2024

தொழில் கடன்கள் விண்ணப்பிக்க அழைப்பு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று(அக்.11) வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் குழு நிறுவனங்கள் குறைந்த வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம். மேலும் இந்த திட்டம் தொடர்பான விவரங்களுக்கு 89392-73253 என்ற எண்ணில் அல்லது குத்துக்கல்வலசையில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

News October 11, 2024

தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு

image

நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று மிக கனமழை(ஆரஞ்ச் அலெர்ட்) பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் தென்காசி உட்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியே செல்லும் மக்கள் முன் பாதுகாப்புடன் செல்வது நல்லது. SHARE IT.

News October 11, 2024

ஆலங்குளம் அருகே குவாரியை மூட வேண்டும்: பிரேமலதா

image

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று(அக்.,10) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓடக்கரை துலுக்கப்பட்டியில் 3 ஆண்டுகளாக கிரசர் மற்றும் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு அதிக வெடி வைப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த விதிமுறைகளை மீறி இயங்கும் கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

News October 11, 2024

கடையநல்லூர் ஸ்டேசனில் மரக்கன்று நட்டுவைத்த SP

image

தென்காசி மாவட்ட எஸ்பி சீனிவாசன் நேற்று(அக்.,10) இரவில் கடையநல்லூர் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தற்போதைய நிலைகளையும் ஆய்வு செய்து அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். தொடர்ந்து காவல்நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார்.

News October 11, 2024

வீதி வீதியாக நன்றி தெரிவித்த தென்காசி MP

image

கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய பகுதிகளில் நேற்று(அக்.,10) தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் வீதி வீதியாக சென்று வாக்களித்து வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து கோரிக்கை மனுக்களை பெற்றார். ஒன்றிய திமுக செயலாளர் சீனித்துரை, யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News October 10, 2024

அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

image

மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத் தாழ்வு பகுதி நிலவுகிறது. மேலும், வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். அதன்படி நாளை(ஆக.11) தென்காசி உள்ளிட்ட 15 மாவட்டங்கள், நாளை மறுநாள்(ஆக.12) தென்காசி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!