Tenkasi

News January 29, 2026

தென்காசி: ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை ரெடி., NO EXAM

image

தமிழ்நாடு சுகாதார துறையில் (TN MRB) காலியாக உள்ள 999 Nursing Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இதற்கு சம்பளம் ரூ.15,700 – ரூ.58,100 வரை வழங்கப்படும். 10th, Nursing Assistants course முடித்தவர்கள் பிப்.8க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மார்க் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News January 29, 2026

தென்காசி: மனைவியை குத்திக் கொல்ல முயன்ற கணவன்

image

திருவேங்கடம் பகுதியை சேர்ந்த ரகுவரன் (29) சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவருக்கும், இவரது மனைவி சங்கீதா (26) இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் சங்கீதாவிடம் குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்த முயன்றதாக கூறப்படுகிறது. தப்பியோடிய சங்கிதா அளித்த புகாரின் பேரில் குருவிகுளம் போலீசார் ரகுவரனை கைது செய்தனர்.

News January 29, 2026

தென்காசி: 3 போலீசார் பணி இடை நீக்கம்

image

புளியங்குடியை சேர்ந்த முகமது கனி (71). இவரது மகள் ஆயிஷா சித்திக்கா (41) ஆகியோர் புகையிலை பொருட்கள் விற்றதாக புளியங்குடி போலீசார் விசாரனைக்காக காவல் நிலையம் அழைத்து சென்ற போது அங்கு விஷம் குடித்து மயங்கி விழுந்தனர். பின்னர் இருவரும் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக கூறி, போலீசார் மருது பாண்டியன், தேவி, ஏட்டு சிவா ஆகிய மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

News January 28, 2026

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (28-01-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி என் -9884042100  தொடர்பு கொள்ளலாம்.

News January 28, 2026

தென்காசியில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி

image

இது நம்ம ஆட்டம் தென்காசி மாவட்ட அளவிலான போட்டிகள் ஜன. 31 அன்று கேரம், எறிபந்து ஆகிய போட்டிகள் மற்றும் பிப்.1 அன்று மாவட்ட விளையாட்டு வளாகம் மேலபாட்டக்குறிச்சியில் மணியளவில் நடைபெறவுள்ளது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04633-212580 (அ) 7806981962 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். மேற்காணும் தகவலை தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

News January 28, 2026

தென்காசி: ரேஷன் கடை வரிசையில் நிற்க வேண்டாம்

image

தென்காசி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News January 28, 2026

தென்காசி மக்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

image

தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட இலத்தூர், தென்காசி சாலையில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமப்புற ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் கீழ் சிசிடிவி பொருத்துதல் மற்றும் பழுது நீக்குதல் பயிற்சி வகுப்பு பிப்ரவரி 2ம் தேதி துவங்க உள்ளது. இத்ற்கான முன்பதிவு தற்போது துவங்கியுள்ளது.

News January 28, 2026

தென்காசி : ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!

image

தென்காசி மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. 30 நாளில் தீர்வு கிடைக்கும். SHARE பண்ணுங்க..!

News January 28, 2026

தென்காசி : வங்கி வேலை.. ரூ. 48,000 சம்பளம்!

image

யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள Generalist and Specialist Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 173
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.48,480 – 93,960/-
5. கல்வி தகுதி: B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA
6. கடைசி தேதி: 02.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 28, 2026

தென்காசி ரயில்வே கேட்டில் போக்குவரத்து நெரிசல்

image

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் மேம்பால பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காலை, மாலை நேரங்களில் பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்தை சரி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

error: Content is protected !!