India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்காசி மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 5.சாலை விபத்து அவசர சேவை – 1073 6.பேரிடர் கால உதவி – 1077 7.குழந்தைகள் பாதுகாப்பு – 1098 8.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 9.மின்சாரத்துறை – 1912. எல்லோரும் தெரிந்துகொள்ள உடனே SHARE பண்ணுங்க

இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Ltd -இல், தற்போது Relationship Manager, Digital Marketing Specialist உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.66,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.25ம் தேதிக்குள் இந்த லிங்கை <

தென்காசி கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா வருகிற 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். காலை 8 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத முருகருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடைபெறுகிறது. பக்தர்களின் பால்குட பவனி நடைபெற உள்ளது.

தென்காசி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். வாட்ஸ் ஆப்பில் ஆதார் வந்துவிடும் (குறிப்பு உங்க ஆதார் இணைக்கபட்டுள்ள மொபைல் எண்ணில் இருந்து ‘HI’ அனுப்ப வேண்டும்.) இதை உங்க நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

குடியரசு தின விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் போலீசார் அளித்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா நடைபெறும் தென்காசி ஈஸ்வரன் பிள்ளை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம் பகுதியை போலீசார் தங்கள் பாதுகாப்பில் எடுத்துள்ளனர். இந்த மைதானத்தில் ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டது. மாவட்ட முழுவதில் உள்ள வழிபாட்டுதலங்கள், பஸ் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீசார் கண்காணிக்கின்றனர்.

சனி, ஞாயிறு மற்றும் குடியரசு தின தொடர் விடுமுறையை முன்னிட்டு செங்கோட்டையிலிருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் எண் 06138 இன்று இயக்கப்படுகிறது. செங்கோட்டையிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு நாளை 27ம் தேதி அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயில் தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை வழியாக தாம்பரம் செல்லும்.

1. தென்காசி மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது
2. இதில் மக்கள் கலந்து கொண்டு கிராமத்தின் செலவு / வரவு கணக்குகளை பார்வையிட்டு கேள்வி எழுப்பலாம்.
3. கூட்டத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து தீர்மானம் இயற்றினால், அதனை அரசு/அதிகாரிகள் நினைத்தால் கூட ரத்து செய்ய முடியாது.
4. மக்களுக்கு முழு அதிகாரத்தையும் வழங்கும் கிராம சபை கூட்டத்தில் மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்!

தென்காசி மக்களே, சீனி அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1 இங்கு <
2. அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3. அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4. சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452 52525 இந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் HI அனுப்பி தெரிஞ்சுக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க..

தென்காசி மாவட்டம் கரடிகுளத்தைச் சேர்ந்த விவசாயி லட்சுமணன் (40), காற்றாலை மின்மாற்றி வளாகத்தில் நிர்வாண நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடைமைகள் சிதறிக் கிடந்த நிலையில், சேர்ந்தமரம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிர விசாரணை.

கடையநல்லூர் அருகே கீழ திருவேட்டநல்லூரைச் சேர்ந்த பழனிச்சாமியின் மோட்டார் சைக்கிள், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்தபோது தீயிட்டு எரிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் சொக்கம்பட்டி போலீசார் விசாரித்தனர். முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (22), பசுபதி பாண்டியன் (22) ஆகியோர் இச்செயலில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை.
Sorry, no posts matched your criteria.