Tenkasi

News May 6, 2024

தென்காசி அருகே திருட்டு; அதிர்ச்சி

image

கடையம் அருகிலுள்ள,முதலியார்பட்டி மெயின்ரோட்டில், பக்கீர் மைதீன் (56) என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார்.அதே ரோட்டில் மஸ்த் செப்பல் என்ற பெயரில் தமீம் அன்சாரி என்பவர் செருப்பு கடை வைத்துள்ளார்.இந்த இரண்டு கடைகளையும் வழக்கம்போல் காலையில் திறக்கும் போது பூட்டு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடையின் கல்லாவில் பணம் செல்போன் பல பொருட்கள் திருட்டுப் போய் உள்ளனர்.கடையம் போலீஸ் விசாரிக்கின்றனர்.

News May 5, 2024

தென்காசியில் வெளுக்கும் மழை

image

தமிழகத்தில் மே 7, 8-ம் தேதிகளில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், 8-ம் தேதி கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், தென்காசி பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

News May 5, 2024

தென்காசி:இரவிலும் குளிர்பான விற்பனை அமோகம்

image

ஆலங்குளம் வட்டாரத்தில் கோடை வெயில் கடுமையாக கொளுத்துகிறது. இதனால் பகல் நேரங்களில் பதநீர், நுங்கு, இளநீர், கரும்பு சாறு ஐஸ் சர்பத் உள்ளிட்ட குளிர்பானங்கள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. கடந்த சில தினங்களாக வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இரவிலும் வெப்பம் வாட்டி வதைக்கிறது. இதனால் இரவு நேரங்களிலும் குளிர்பானம் பருக மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் இரவிலும் இதன் விற்பனை களை கட்டியுள்ளது.

News May 4, 2024

புகையிலை பொருட்கள் பறிமுதல்

image

வாசுதேவநல்லூர் அருகே சிவகிரி திரவுபதி கோயில் முன்பு போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த சிவலிங்கபுரத்தை சார்ந்த இசக்கி என்பவர் டூவிலரை நிறுத்தி சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 10 கிலோ புகையிலைப் பொருட்களுடன் டூவிலரை பறிமுதல் செய்த போலீசார் இசக்கியை அதிரடியாக கைது செய்தனர்.

News May 4, 2024

தென்காசி குற்றால மெயின் அருவி

image

குற்றால அருவிகள், தென்காசியில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அருவிகள் ஆகும். அதில் முக்கிய அருவியாக மெயின் அருவி உள்ளது. இவ்வருவியில் பருவ காலங்களில் தண்ணீர் அர்ப்பரித்து கொட்டும். இப்பகுதியிலேயே சங்கு வடிவில் உள்ள குற்றாலநாதர் கோவில், மற்றும் பல சிவன் கோவில்கள் உள்ளன. இந்த மூலிகை மலையிலிருந்து வரும் அருவில் குளிப்பதால் நோய்கள் விலகும் என்ற நம்பிக்கை இன்றவும் நம்பப்படுகிறது.

News May 4, 2024

தென்காசி அருகே விபத்து;சம்பவ இடத்தில் மரணம் 

image

கடையம் ராமலிங்கபுரத்தை சேர்ந்த முத்து (47) என்பவர் இரவணசமுத்திரம் இரயில்வே கேட் மேல்புறம் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது ஹெட் லைட் வேலை செய்யாமல் இருந்த இருசக்கர வாகனத்தை அதிவேகத்தில் ஓட்டி வந்து மோதியதில் முத்து
சம்பவ இடத்திலேயே உயிருக்கு போராடி பலியானார். பலியானவரின் உடல் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்தவர் காயம்.

News May 4, 2024

தென்காசி அருகே மறைத்து எடுத்து வரப்பட்ட கோழிக்குஞ்சுகள்

image

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதை தொடர்ந்து தென்காசி மாவட்டம் தமிழக கேரளா எல்லையான புளியரையில் சோதனைச் சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நேற்று கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த லாரியை சோதனைச் சாவடியில் சோதனை செய்த போது லாரிக்குள் கோழிக்குஞ்சுகளை மறைத்து வைத்துக் கொண்டு வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த லாரி கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

News May 3, 2024

தென்காசி மாவட்டத்தில் மழை

image

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இரவு 10 மணி வரை தென்காசி மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 3, 2024

தென்காசி; ரயிலில் இருந்து தவறி விழுந்து பலி

image

தென்காசி மாவட்டம் மேலநீலத நல்லூரை சேர்ந்த சுரேஷ்குமார், இவரது மனைவி கஸ்தூரி. 7 மாத கர்பிணி என்பதால் ஊருக்கு சென்று வளைகாப்பு நடத்துவதற்காக சென்னையில் இருந்து சங்கரன்கோவிலுக்கு கொல்லம் ரயிலில் நேற்று இரவு வந்துகொண்டிருந்தார். அப்போது வாந்தி வந்ததால் படிகட்டில் நின்று வாந்தி எடுத்த போது தவறி கீழே விழுந்து பலியானார். கர்ப்பிணி பெண் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News May 3, 2024

தென்காசி: அதிமுக நீர்மோர் விநியோகம்

image

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூரில் இன்று ராஜாங்கபுரம் கிளை அதிமுக பொதுமக்களுக்கு நீர் மற்றும் நீர்சத்து பழங்கள் வழங்கப்பட்டன.அதிமுக விவசாய அணி துணைச் செயலாளர் ராசு ஒன்றிய செயலாளர் கணேசன், லட்சுமி பாண்டியன், நடராஜன், மைதீன், நாலாயிரம் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.