Tenkasi

News January 31, 2026

தென்காசி: குறைந்த விலையில் கார், பைக் வேண்டுமா.?

image

தென்காசி மாவட்ட குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு, அரசு விதி முறைகளின் படி பறிமுதல் செய்து அரசுடமையாக்கப்பட்ட 2 மற்றும் 4 சக்கர மோட்டார் வாகனங்கள், 2 மூன்று சக்கர மோட்டார் வாகனங்கள், 39 பைக்குகள் என மொத்தம் 43 மோட்டார் வாகனங்கள் 06.02.2026 ம் தேதி காலை 10 மணிக்கு பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை வளாகத்தில் (அரசு ஐடிஐ அருகில்) பொது ஏலம் விடப்படும் என இன்று எஸ்பி அலுவலகம் அறிவித்துள்ளது.

News January 31, 2026

தென்காசி : இலவச சமையல் சிலிண்டர் பெறுவது எப்படி?

image

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற ‘இங்கே <>கிளிக்<<>>’ செய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தைத் (Indane/Bharat/HP) தேர்வு செய்யவும்
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க

News January 31, 2026

தென்காசி: B.E/B.Tech போதும்., ரூ.1,05,280 சம்பளத்தில் வேலை

image

தென்காசி மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 418 Specialist Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 22 – 37 வயதுகுட்பட்ட B.E/B.Tech, M.E/M.Tech, MCA படித்தவர்கள் பிப். 19க்குள் இங்கு <>க்ளிக் செய்து <<>>விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.48,480 – 1,05,280 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை அனைவருக்கும் SHARE IT.

News January 31, 2026

தென்காசி: காட்டு யானைகள் தொடர் அட்டகாசம்

image

கடையம் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று மார்பி தாமஸ் தோட்டத்தில் 9 தென்னை, 2 பனை மரங்கள், மரிய ஜெகநாதன் தோட்டத்தில் 3 தென்னை, ராஜாபால் தோட்டத்தில் 6 தென்னை மரங்களை காட்டு யானைகள் சாய்த்து சேதப்படுத்தின. கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

News January 31, 2026

தென்காசி: உங்க ரேஷன் அட்டையை CHECK பண்ணுங்க

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க…மேலும் தகவல்களுக்கு 9677736557, 1800-599-5950. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News January 31, 2026

தென்காசி: 10th போதும்., ரயில்வேயில் சூப்பர் வேலை ரெடி

image

தென்காசி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..

News January 31, 2026

தென்காசி: ரூ.48,480 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை ரெடி!

image

தென்காசி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers (CBO) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் பிப் 18க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.48,480 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை வேலை நாடும் நபர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

News January 31, 2026

தென்காசி அருகே கல்லூரி பேருந்து விபத்து!

image

ஆலங்குளம் பேருந்து நிலையம் முன், நேற்று சீதபற்பநல்லூர் தனியார் கல்லூரி பேருந்து மீது முத்துகிருஷ்ணப்பேரியைச் சேர்ந்த வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் வேன் டிரைவர் மனோகர், 10 மாணவர்கள் காயமடைந்தனர். படுகாயமடைந்த மனோகர், மாணவர் விக்னேஷ் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். லேசான காயமடைந்த மாணவர்கள் ஆலங்குளம் GH-ல் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் விசாரனை

News January 31, 2026

தென்காசி: மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

image

ஆலங்குளம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சார்ந்தவர் வசந்த் (30). சவுண்ட் சர்வீஸ் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு எதிர்பாராத விதமாக அவர் வீட்டில் வைத்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த ஆலங்குளம் காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

News January 31, 2026

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (30-01-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி என் -9884042100  தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!