Sivagangai

News January 6, 2026

சிவகங்கை வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

image

மதுரை கோட்டத்தில் நடைபெறும் பொறியியல் பணிகள் காரணமாக கோயம்புத்தூர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் இம்மாதத்தில் இன்று (ஜன.6), நாளை (ஜன.7), ஜன.20, 22, 29 ஆகிய தேதிகளில் திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக நாகர்கோவில் நோக்கி செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News January 6, 2026

சிவகங்கை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

சிவகங்கை மாவட்ட மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 6, 2026

சிவகங்கை கொலையில் பழிக்கு பழி.. 7 பேர் அதிரடி கைது

image

சிவகங்கையில் கடந்த ஆண்டு நடந்த மனோஜ்குமார் கொலைக்கு பழிவாங்க, பயங்கர ஆயுதங்களுடன் திட்டமிட்டிருந்த 7 பேர் கொண்ட கும்பலை காரைக்குடி வடக்கு போலீசார் நேற்று கைது செய்தனர். ரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையில், அவர்களிடம் இருந்த 3 வாள்கள், ஒரு கார் மற்றும் 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

சிவகங்கை: புதிய தேர்வு தேதி அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 116 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டு 04.11.2025 அன்று நடைபெற இருந்த தேர்வு நிர்வாக காரணங்களுக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தேர்வானது வரும் ஜன.9 அன்று சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற் தகுதி தேர்வு நடைபெறும் என்று மாவட்ட காவல் நிர்வாக அதிகாரி அறிவித்துள்ளார்.

News January 6, 2026

சிவகங்கையில் இன்று இங்கெல்லாம் மின்தடை

image

சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் துணைமின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுதால், இன்று (ஜன-06) செவ்வாய்க் கிழமை காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை ஸ்ரீராம்நகர், கோட்டையூர், பள்ளத்தூர், கொத்தமங்கலம், கானாடுகாத்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. அதற்கேற்ப உங்கள் பணிகளை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள். SHARE IT…

News January 6, 2026

ஊர்க்காவல் படை பணிக்கான தேர்வு முக்கிய அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 116 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டு 04.11.25 அன்று நடைபெற இருந்த தேர்வு நிர்வாக காரணங்களுக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. மேற்படி தேர்வானது வருகின்ற 09.01.26 அன்று சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு உடற் தகுதி தேர்வு நடைபெறும் என்று மாவட்ட காவல் நிர்வாக அதிகாரி அறிவித்துள்ளார்.

News January 6, 2026

சிவகங்கை மாவட்ட மாணவர்கள் கவனத்திற்கு!

image

சிவகங்கை மாவட்டம், வருகின்ற 21.1.2026ம் தேதியன்று திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள குறளாசிரியர் மாநாடு, குறள் வினாடி வினா போட்டிகளில் பங்கேற்பதற்கு, அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தெரிவு செய்யும் கொள்குறி வடிவிலான எழுத்துத் தேர்வு வருகின்ற 9.12026 அன்று சிவகங்கை, அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!