India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 4 லட்சத்திற்கும் மேல் வாக்கு பெற்று வெற்றியை தன் வசப்படுத்தியுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சேவியர் தாஸ் 2 லட்சமும், பாஜக வேட்பாளர் தேவநாதன் 1 லட்சத்திற்கு மேல் வாக்குகள் பெற்றனர். இத்தொகுதியில் காங்கிரஸ் “கை” ஓங்கியுள்ளது.
சிவகங்கை மக்களவை தொகுதியில் 26 சுற்றுகள் உள்ள நிலையில், 23 சுற்றுகள் முடிவில் காங்., வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 4,12,392 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் 215173 வாக்குகள் பெற்று 2ஆம் இடம் பிடித்தார். தேவநாதன் 184315 3ஆம் இடம்பிடித்தார். 23வது சுற்று முடிவில் 1,97,219 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
சிவகங்கை மக்களவை தொகுதியில் 11வது சுற்று முடிவில் கார்த்தி சிதம்பரம் 2,18,694 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் 1,18,655 வாக்குகளும், பாஜக வேட்பாளர் தேவநாதன் 89,976 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி 79,543 வாக்குகள் பெற்றுள்ளார்.இந்நிலையில் பாஜக வேட்பாளர் தேவநாதன் கடும் பின்னடைவை சந்தித்து இருக்கிறார்.
சிவகங்கை மக்களவை தொகுதியில் 11வது சுற்று முடிவில் கார்த்தி சிதம்பரம் 2,18,694 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் 1,18,655 வாக்குகளும், பாஜக வேட்பாளர் தேவநாதன் 89,976 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி 79,543 வாக்குகள் பெற்றுள்ளார். 11 வது சுற்று முடிவில் கார்த்திக் சிதம்பரம் 1,00039 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
சிவகங்கை மக்களவை தொகுதியில் 6 சுற்றுகள் முடிவில் கார்த்தி சிதம்பரம் 1,22,478 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துள்ளார். இந்நிலையில், 280 தபால் வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், காங்., 1139 வாக்குகளும், அதிமுகவிற்கு 243 வாக்குகளும், பாஜகவிற்கு 707 வாக்குகளும், நாதக 524 வாக்குகளும், பதிவாகியுள்ளன. நோட்டாவிற்கு 57 வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை மக்களவை தொகுதியில் 4ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதில், திமுக கூட்டணி (காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம்-82182, அதிமுக (சேவியர் தாஸ்-43950, பாஜக வேட்பாளர் தேவநாதன்-31651, நாதக வேட்பாளர் எழிலரசி-28146, 4வது சுற்று முடிவில் 38232 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம்
முன்னிலையில் உள்ளார்.
சிவகங்கை மக்களவை தொகுதியில் 3ஆம் சுற்று முடிவு வெளியாகியுள்ளது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 60,839 வாக்குகள் பெற்று 25,532 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சேகர் தாஸ் 34,307 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் தேவநாதன் 23,433 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 21,544 வாக்குகள் பெற்றுள்ளார்.
சிவகங்கை மக்களவை தொகுதியில் 5 சட்டமன்ற தொகுதிகளில் முதல் சுற்று நிலவரம் சற்று முன் வெளியானது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 14,319 வாக்குகள் பெற்று 5,397 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். முதல் சுற்றுகளின் முடிவில் காங்., 14,319, அதிமுக 9,022 நாம் தமிழர் 4,932, பாஜக 4,878 வாக்குள் பெற்றுள்ளன.
சிவகங்கை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 1,803 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். முதல் சுற்றின் முடிவுகள் வெளியாகியுள்ளனர். இதில், கார்த்தி சிதம்பரம் 3,727 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 2,060, பாஜக 811, நாம் தமிழர் 1,079 வாக்குகள் பெற்றுள்ளன.
சிவகங்கை மக்களவை தொகுதி(31)ல் போட்டியிட்ட வேட்பாளரின் வாக்குகள் 6 தொகுதியில் 1873 வாக்குச்சாவடியில் 84 (இவிஎம்) இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. சிவகங்கை தொகுதிக்கான வெற்றி வேட்பாளர் யார்? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். காங்கிரஸ் கட்சி பாஜக கூட்டணி கட்சி நாம் தமிழர் கட்சி ஆகியோரிடம் போட்டி நிலவுகிறது.
Sorry, no posts matched your criteria.