India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியம் வழங்க அரசு ரூ.374 கோடி ஒதுக்கியுள்ளதாக ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்டவைகளுடன் ‘https://tnhorticulture.tn.gov.in/tnhortnet” இணையதளத்திலும், அந்தந்த தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்திலும் பதிவு செய்து பயன்பெறலாம் என்றார்.
சிவகங்கை பேருந்து நிலையத்தில் தினமும் சுமார் 300 பேருந்துகள் வந்து செல்கின்றன. இங்கு பயணிகளுக்கு இடவசதி இல்லாததால் அனைத்து வசதிகளும் கொண்ட புதிய பேருந்து நிலையம் அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக மதுரை புறவழிச்சாலையில் 4 ஏக்கர் நிலத்தில் 100 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கவும் ரூ.5 கோடி செலவில் தெப்பக்குளத்தை சீரமைக்க போவதாக நகராட்சி தலைவர் துரைஆனந்த் தெரிவித்தார்.
மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட புறம்போக்கு பகுதியில் குடியிருப்போருக்கு மறு குடியமர்வு செய்யும் வகையில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் மானாமதுரை சமத்துவபுரம் அருகில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெறுவதற்கு பயனாளிகள் விண்ணப்பிப்பதற்கான முகாம் நாளை(ஆக.02) மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கான பாலியல் தொந்தரவுகள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வானது முதன்மை மாவட்ட நீதிபதியின் வழிகாட்டுதலின் படி அரசு மகளிர் கல்லூரியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி எம்.பரமேஸ்வரி தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.
சிவகங்கை நகர், தாலுகா மற்றும் காளையார்கோவில் காவல் நிலைய குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த 45 காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களை பாராட்டும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் பாராட்டு சான்றிதழ்களை இன்று வழங்கினார்.
சமீபகாலமாகவே ‘கள்’ இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக அண்ணாமலை, சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு ஆதரவு தெரிவிப்பதுடன், பலதரப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகிறது. இந்நிலையில், ‘கள்’ விற்பனை மீதான தடையை நீக்க கோரிய மனுவை அரசு பரிசீலிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து ‘கள்’ உற்பத்தி செய்யப்படுகிறது. பனை மரங்கள் நிறைந்து காணப்படும் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் சிவகங்கையில் கள் அதிகளவில் இறக்கப்பட்டது. கள்ளச்சராய பலி & ‘TASMAC’ மதுவின் தாக்கத்தை காட்டிலும் ‘கள்’ பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற கருத்தும் நிலவுகிறது. மீண்டும் ‘கள்’ விற்பனைக்கு வருவது குறித்த உங்கள் கருத்து என்ன?
காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட செஞ்சை பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறையின் சார்பில் மருத்துவ கட்டமைப்புகள் தொடர்பாக திட்ட பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், அமைச்சர் பெரிய கருப்பன் ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைத்தனர். உடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கீழடி அகழாய்வுக் குழி ஒன்றில் இன்று சுடுமண்ணாலான உருளைவடிவ குழாய்கள் பொருத்திய வடிகால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆறு உறைகளுடன் காணப்படும் இச்சுடுமண் வடிகாலானது மிக நேர்த்தியாக ஒன்றுக்குள் ஒன்றாக பொருத்தப்பட்ட நிலையில் உள்ளது. உருளைக்குழாய் வடிகாலின் தொடர்ச்சி, நீளம் மற்றும் பயன்பாடு பற்றி அறிய அடுத்த குழியை அகழ்ந்து ஆய்வதற்கானப் பணிகள் தொடர்ந்து வருவதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
“மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் தேவகோட்டை வட்டாரத்திற்குட்பட்ட கள்ளங்குடி, காரை, நாகாடி, தளக்காவயல், திருமணவயல், இளங்குடி, சிறுவத்தி ஆகிய கிராமங்களுக்கென திருமணவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் வரும் 31ஆம் தேதி காலை 10- 3 மணி வரை முகாம்கள் நடைபெறவுள்ளது. எனவே பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.