Sivagangai

News January 10, 2026

காரைக்குடி ரஸ்க் கம்பெனியில் பயங்கர தீ விபத்து

image

காரைக்குடி நகர் பகுதியில் அனுமதி இல்லாமல் வீட்டில் ரஸ்க் தயாரிப்பு கம்பெனி செயல்படுவதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் கடந்த நவம்பரில் அதனை பூட்டி சீல் வைத்தனர். அதே தளத்தில், பணியில் இருந்த வடமாநில இளைஞர்கள் சிலர் தற்போதும் தங்கி இருந்து வந்தனர். நேற்றிரவு ரஸ்க் கம்பெனியில் திடீரென்று தீப்பிடித்தது. இதில், ரஸ்க் தயாரிக்கும் இயந்திரங்கள் எரிந்து போனது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்

News January 10, 2026

சிவகங்கை: கூட்டு பட்டாவை இனி EASY-ஆ மாற்றலாம்!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <>இங்கு க்ளிக் <<>>செய்து, பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் ஆப்ஷனை தேர்ந்தெடுத்து தனி பட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30-60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE IT

News January 10, 2026

சிவகங்கை: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன்

image

சிவகங்கை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுவன், அப்பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை, தன் வீட்டிற்கு பின்னால் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி சிவகங்கை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

News January 10, 2026

சிவகங்கை: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன்

image

சிவகங்கை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுவன், அப்பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை, தன் வீட்டிற்கு பின்னால் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி சிவகங்கை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

News January 10, 2026

சிவகங்கை: விவசாயிகளே., கலெக்டர் அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில், தனியாருக்கு சொந்தமான நெல் அறுவடை இயந்திரங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள வாடகை தொகையில் மட்டுமே இயக்கப்படவேண்டும். கூடுதலாக வாடகை வசூல் செய்யும் நெல் அறுவடை இயந்திரங்கள் குறித்து, விவசாயிகள் தங்களது புகார்களை குறிப்பிட்டுள்ள அலுவலர்களிடம் நேரிலோ அல்லது குறிப்பிட்டுள்ள அலைபேசி எண்களின் வாயிலாகவோ தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி அறிவித்துள்ளார்.

News January 10, 2026

சிவகங்கைக்கு நிதியுதவி வழங்கிய பிரபல நடிகர்

image

சிவகங்கை அருகே உள்ள மாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாட்டாகுடி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட நாட்டாகுடி கிராமத்தில் விவசாயத்தை மீட்டெடுக்கும் முயற்சிக்கு உதவும் வகையில் நடிகர் கார்த்தி தனது உழவன் அறக்கட்டளை சார்பில் 500 அடி நீளத்திற்கு வேலி அமைக்க 60 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

News January 9, 2026

சிவகங்கை : EB பில் – சான்றிதழ்கள் எல்லாமே இனி Whatsapp -ல!

image

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க..

News January 9, 2026

சிவகங்கை: கல்யாணத்துக்கு தங்கம் + ரூ. 50,000 – APPLY

image

சிவகங்கை மக்களே, அரசின் சார்பாக திருமண உதவி திட்டங்களில் திட்டம் 1: ரூ.25,000 மற்றும் 8 கிராம் தங்கம். திட்டம் 2: ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. விண்ணப்பிச்சு பணம் வரலையா இங்<>கு க்ளிக்<<>> செய்து விண்ணப்ப எண் பதிவு செய்து சேக் பண்ணுங்க. இதில் DISTRICT WELFARE OFFICE APPROVED ன்னு பணம் + தங்கம் வந்தடும். புதுசா விண்ணப்பிக்க உங்க அருகில் உள்ள இசேவை மையத்தை அணுகுங்க. SHARE பண்ணுங்க!

News January 9, 2026

சிவகங்கை: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) விருதுநகர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

News January 9, 2026

சிவகங்கை: தேர்வு இல்லாமல் ARMY ல் ரூ.1,00,000 சம்பளத்தில் வேலை..

image

இந்திய ராணுவத்தில் SSC (Technical) பிரிவில் 381 காலியிடங்கள் உள்ளன. இதற்கு ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். BE., B.tech ல் ஏதேனும் ஒரு பிரிவில் பயின்றவர்கள் 05.02.2026 க்குள் இந்த லிங்கை<> கிளிக் செய்து <<>>ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும். முக்கியமாக இதற்கு தேர்வு கிடையாது. மதிப்பெண் மற்றும் நேர்காணல் மூலம் பணி வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE..

error: Content is protected !!