India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு சிறப்பு பொது விநியோகத்திட்டத்தில் 2.23 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது. ஜூன்.2024 மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாத அட்டை தாரர்கள் ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 415286 அட்டை தாரர்களில் ஜூலையில் பொருட்கள் பெற இயலாதவர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இந்நிலையில், சிவகங்கை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெளியே சென்ற உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
மதுரை, திருவனந்தபுரம் கோட்டங்களில் தொழில்நுட்ப பணிகள் நடைபெறுவதால் ரயில்கள் மாற்றப்பட்டுள்ளன. இதனால் ஆக.5, 6, 8, 9, 11 ஆகிய நாட்களில் மதுரை – ராமநாதபுரம் இடையேயான பயணிகள் ரயில், குருவாயூர் – எழும்பூர் ரயில் ஆக.4,5,8,10 ஆகிய நாட்களில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும். இந்த ரயில்கள் மானாமதுரை, காரைக்குடி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சிவகங்கை மாவட்டத்தில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 15 வயதுக்கு மேற்பட்டோர்களில் எழுத, படிக்க தெரியாதோருக்கு புதிய பாரத எழுத்தறிவு 2022 – 27 ஐந்தாண்டு கல்வி திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் மாவட்டத்தில் 12 வளமையங்களில் 10,366 பேர் கண்டறியப்பட்டு 2 ஆண்டுகளில் 918 மையங்களில் 918 தன்னார்வலர்கள் மூலம் பயிற்ச்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டில் 12 ஒன்றியங்களில் 7980 பேர் கட்டறியப்பட்டுள்ளனர்.
திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும், அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.tcp.org.in/eduins/login.aspx என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் காரைக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து சேர்ந்து கொள்ளலாம் பயிற்சி பெறுகின்ற மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டண சலுகை, விலையில்லா மிதிவண்டி, சீருடைகள், விலையில்லா காலணி, வரைபடக் கருவிகள், நோட்டு புத்தகங்கள் போன்றவை இலவசமாக வழங்கப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் தெரிவித்துள்ளார்.
உலக சுற்றுலா தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டிலுள்ள சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கு தமிழக அரசு சார்பில் சுற்றுலா விருது வழங்கப்படுகிறது. இதில், “சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் https://www.tntourismawards.com/ என்ற இணையதளத்தின் வாயிலாக வருகின்ற 20.08.2024-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்” என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில், காலியாகவுள்ள இடங்களுக்கான நேரடி சேர்க்கை வருகின்ற 16.08.2024 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 94990 55784, 94990 55785 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் வாழைக்கு காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் செப்.,16 தேதிக்குள் காப்பீடு செய்யலாம். மழை, வறட்சி, நோய் தாக்குதலால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1,24,982 கிடைக்கும். இதற்கு பிரீமியம் தொகையாக ரூ.6,259-த்தை தேசிய வங்கி அல்லது இ-சேவை மையம் மூலமாக செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என தோட்டக்கலை துணை இயக்குனர் குருமணி தெரிவித்துள்ளார்.
திருப்புவனத்திற்கு பேருந்து நிலையம் இல்லாமல் பல வருடங்களாக மக்கள் போராடி வருகிறார்கள். இந்நிலையில், நேற்று(ஆக.01) சிவகங்கை தேவஸ்தான நிர்வாகிகளிடம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், அமைச்சர் பெரிய கருப்பன், சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், பேரூராட்சி சேர்மன் சேங்கைமாறன் ஆகியோர் நடத்திய பேச்சு வார்த்தையில் பேருந்து நிலையம் அமைக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.