India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கையில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயற்குழுக் கூட்டத்துக்கு கட்சி நிர்வாகிகள் பலரை அழைக்கவில்லை என குற்றம்சாட்டி கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக சென்னை சத்தியமூர்த்தி பவனில் நூற்றுக்கணக்கானோர் கோஷமிட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி கார்த்தி சிதம்பரம், ‘எனக்கு எதிராகப் புகார் கொடுத்தது பற்றி தெரியாது. இதைப்பற்றி எனக்கு ஒரு கருத்தும் கிடையாது’ என தெரிவித்தார்.
சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது. இதில் இலவச வீட்டு மனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 375 மனுக்கள் பெறப்பட்டன. அம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
உலக சுற்றுலா தினத்தில் விருதுகள் பெற சுற்றுலா தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tntourismawards.com என்ற இணையதளத்தில் ஆக.20 க்குள் விண்ணபிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சுற்றுலா அலுவலர் அல்லது 89398 96400 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் முதல் அமைச்சர் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஒவ்வொரு கல்வியாண்டிற்கும் உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.1000 என இளநிலை பட்டப்படிப்பு வரை வழக்கப்படும். இதற்காக நேற்று சிவகங்கையில் 7 மையங்களில் நடைபெற்ற தேர்வில் 1,911 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 1,765 பேர் தேர்வு எழுதிய நிலையில் 146 பேர் தேர்வு எழுதவில்லை.
தேவகோட்டை, திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கோவிலுக்குச் சென்று வந்த கார் விபத்துக்குள்ளானது. ராமேஸ்வரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி மாவிடுதிகோட்டை என்ற இடத்தில் இன்று சதீஷ் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் பயணித்த பெண் உட்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 15க்கும் மேற்பட்ட டாக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். எனவே நிர்வாகம், காலியாக உள்ள பணியிடங்களில் டாக்டர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகின்றது. இந்நிலையில், சிவகங்கை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று இரவு 8.30 மணி வரை இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இடையிடையே 30-40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று(ஆக.04) மாலை 7 மணி வரை 29 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காரைக்குடி, திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த கடந்த மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இதனிடையே தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சிக்கு ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காரைக்குடி மாநகராட்சிக்கு செங்கல்பட்டு மண்டல இயக்குநர் சித்ரா பொறுப்பு ஏற்க உள்ளார்.
இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் யரும் இல்லை. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆறு, கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது, காதல் என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் நாம் செய்த சேட்டைகள் பல உண்டு. அந்த வகையில் உங்க நண்பன் பெயர்,அவருடன் நீங்கள் செய்த சேட்டையை கீழே கமெண்ட் பண்ணி, நண்பனுக்கு சேர் செய்யுங்க.
Sorry, no posts matched your criteria.