India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகங்கை மாவட்டத்தில் மீன் விரலிகளை வாங்க விரும்பும்
மீன் வளர்ப்போர், உள்நாட்டு மீனவர்கள், கண்மாய்களில் மீன்பாசி
குத்தகை எடுப்போர் மற்றும் மீன் விரலிகள் உற்பத்தி செய்வோர், பிரவலூர் அரசு மீன் விதை வளர்ப்பு பண்ணையினை
தொடர்பு கொள்ளலாம். மேலும், 04575 – 240848 என்ற தொலைபேசி எண் அல்லது மீன்வள ஆய்வாளரை 9384824553 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், இன்று(ஆக.29) காலை 11 மணி அளவில் கொடி மரம் அருகே உற்சவ விநாயகர் அங்குசத்தேவர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை(ஆக. 30) காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாவட்டத்தின் அனைத்துத் துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கின்றனர். மேலும், இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள 12 ஏ.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி துணை எஸ்.பி.யாக அங்கிட் அசோக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பு காரைக்குடி துணை எஸ்.பி.யாக பிராகாஷ் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை கீழடி அருகே பசியாபுரம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மஹாலில் வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி வைகை உழவர் குழு சார்பில் விதை நீர் திருவிழா நடைபெற இருக்கிறது. இதில் 20 வகையான நெல் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அது மட்டுமல்லாமல் ராமநாதபுரத்தை மாவட்டத்தைச் சேர்ந்த தில்லைநாயகம் நெல்லில் வரும் விவசாயிகளுக்கு உணவு சமைத்து வழங்கப்படும் என்று வைகை உழவர் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் மூலம் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்கள், “SEED” திட்டத்தின் கீழ் நிலம் வீடு மற்றும் வீட்டுமனைப்பட்டா வீடுகள் கட்ட நிதியுதவி வழங்குதல் போன்ற நோக்கங்களை அடிப்படையாக கொண்டுள்ளது. தகுதியின் அடிப்படையில் www. dwbdnc. dosje. gov. in என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தகவல் தெரிவித்துள்ளார்.
கட்டுக்குடிபட்டி கிராமத்திற்கு திருச்சியில் இருந்து வந்து சென்ற தனியார் பேருந்து தற்போது இயக்கப்படாததால் நாளை சாலை மறியல் போராட்டம் என மதியம் வேடூ செய்தியில் வெளியானது. உடனே இது குறித்து தனியார் பேருந்து மேனேஜர்(ம)பொதுமக்கள் உலகம்பட்டி காவல்நிலையத்தில் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒரு வார காலத்திற்குள் பஸ் கட்டுக்குடிப்பட்டி வரும் என உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
திருச்சிராப்பள்ளியில் அன்பில் அறக்கட்டளையின் 25ஆம் ஆண்டு தினத்தை முன்னிட்டு கல்விச் சேவையாற்றிய பெருந்தகையாளர்களுக்கும் , கல்வி அலுவலர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் “அன்பில்-25 விருது” இன்று வழங்கப்பட்டது. இதில் சிவகங்கை மாவட்டம் பொதுத் தேர்வில் மாநிலம் அளவில் இரண்டாமிடம் பெற்றமைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கரங்களால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து விருது பெற்றார்.
சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்தம் 2025 முன்னேற்பாடுகள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களை பார்வை செய்து முன்மொழிவுகள் அனுப்பிட கோரப்பட்டது. இதையடுத்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தலைமையில் நாளை(29/08/2024) நடைபெற உள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுகளினால் தடை செய்யப்பட்டுள்ள,
ஆப்பிரிக்க வகை கெளுத்தி மீன்களை வளர்ப்பது மற்றும்
விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக புகார்கள் ஏதேனும் பெறப்படின் அம்மீன்களை முற்றிலும் அழித்திட வேண்டி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும், பொதுமக்களும் இவ்வகை மீன்களை கொள்முதல் செய்திட வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.