Sivagangai

News January 22, 2026

சிவகங்கை: Whats App மூலம் பான் கார்டு.. சீக்கிரம் APPLY..

image

மதுரை மக்களே, வாட்ஸ் ஆப்பில் பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது
1.WhatsApp-ல் 90131 51515-க்கு Hi அனுப்புங்க.
2. ஆதார் எண் பதிவு பண்ணுங்க
3.PAN Card -ஐ தேர்வு பண்ணுங்க.
4. உங்க பான்கார்டு Whatsapp -ல் வந்துவிடும்
மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News January 22, 2026

சிவகங்கை: மீன்களுக்கு கடும் கிராக்கி.. விலை ரூ.2,000.!

image

மானாமதுரை வைகை ஆற்றுப்பகுதியில், மணல்பரப்பு இல்லாததால் மீன்கள் வரத்து குறைந்துள்ளது. குடிநீர் மற்றும் பாசனத் தேவைக்காக நீர் திறந்து விடப்பட்ட நிலையில், மருத்துவ குணம் மிகுந்த அயிரை மீன்கள் ஆங்காங்கே தேங்கி கிடக்கின்றன. இதனை சிலர் பிடித்து விற்பனை செய்து வரும் நிலையில், ஒரு படி (சுமார் 2 கிலோ) அயிரை மீன் ரூ.2,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது அயிரை மீன் பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

News January 22, 2026

சிவகங்கையில் பல இடங்களில் இன்று மின்தடை.!

image

சிவகங்கை மாவட்டத்தில் ஆ. தெக்கூர், கீழசீவல்பட்டி, மதகுப்பட்டி, காளையார்கோவில், அரசனூர், கல்லல் ஆகிய துணைமின் நிலையங்களில் மின்பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாட்டரசன்கோட்டை, புலியடிதம்பம், பள்ளித்தம்மம், சருகணி, கருங்காலக்குடி, அண்ணாநகர், பர்மாகாலனி, முறையூர், S.Sகோட்டை, மகிபாலன்பட்டி, பூலாங்குறிச்சி சுற்றுவட்டாரத்தில் இன்று (ஜன.22) காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. SHARE IT

News January 22, 2026

சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (21.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 22, 2026

சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (21.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 21, 2026

சிவகங்கை: தவறாக அனுப்பிய Payment – ஐ திரும்பப் பெறலாம்..

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 21, 2026

சிவகங்கை: வேலை தேடுறீங்களா.? ஜன.23 ல் வேலை உறுதி

image

சிவகங்கை மாவட்டம், வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வருகின்ற 23.01.26 அன்று, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் பிரபல நிறுவனங்கள் பங்கேற்கின்றன. உரிய ஆவணங்களுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

News January 21, 2026

சிவகங்கை: குறைந்த விலையில் வீடு வேண்டுமா ?

image

சிவகங்கை மக்களே, சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. ஆனால், கடும் விலை உயர்வால், அது பலருக்கு எட்டாத கனியாகவே உள்ளது. இதை மாற்ற ஒரு வழி இருக்கு! ஆம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வழங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 21, 2026

சிவகங்கை ரயில் நிலையத்தில் முக்கிய ரயில் நிறுத்த அறிவிப்பு

image

சிவகங்கை ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. சிவகங்கை ரயில் நிலையத்தில் தாம்பரம்- செங்கோட்டை எக்ஸ்பிரஸ், வேளாங்கண்ணி – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், இராமேஸ்வரம்- பனாரஸ் எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று முக்கிய ரயில்கள் நின்று செல்ல ரயில்வே நிர்வாக வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News January 21, 2026

காரைக்குடிக்கு ஜாக்பாட்; அரசு அசத்தல் அறிவிப்பு.!

image

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் புதிய டைடல் மற்றும் மினி டைடல் பூங்காக்கள் நிறுவப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடியில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படவுள்ளதாக தமிழக ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காரைக்குடி – திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்க உள்ளது.

error: Content is protected !!